ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அழுகையும் சிரிப்புமாக அனல் பறந்த பிக் பாஸ் வீடு.. கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்ற 9வது நாள்

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிந்துவிட்டது. ஆரம்பத்திலேயே அனல் பறந்த இந்த ஷோ தற்போது எல்லாம் கலந்த கலவையாக களைக்கட்டி வருகிறது. அந்த வகையில் ஒன்பதாவது நாளான நேற்று போட்டியாளர்களின் அழுகை, சிரிப்பு என மாறி மாறி சுவாரசியத்தை கூட்டியது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே சாந்தி அக்கா இனிமேல் என்னுடைய இன்னொரு முகத்தை பார்ப்பீர்கள் என்ற ரேஞ்சுக்கு அனத்தி கொண்டிருந்தார்.

வீட்டு வேலை செய்றதால டாஸ்க்குல கவனம் செலுத்த முடியல. இனி என் பெர்பார்மன்ஸ் எப்படி இருக்குனு மட்டும் பாருங்க என சவால் விட்டுக் கொண்டிருந்தவரை விக்ரமன் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். அதைத்தொடர்ந்து ஆயிஷா, குயின்சி என பெண்கள் கூட்டணி புறணி பேசிக் கொண்டிருந்தது. இது ஒரு புறம் இருக்க கோளாறு பிடித்த அசல் நிவாஸினிக்கு எப்படி டான்ஸ் ஆட வேண்டும் என்று கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார் இப்படியாக அந்த நாள் முடிந்தது.

மறுநாள் காலை பிக் பாஸ் போட்ட பாடலுடன் விடிந்தது. பாட்டை கேட்ட உடனே தூங்கிக் கொண்டிருந்த ஹவுஸ் மேட்ஸ் அலறி அடித்துக் கொண்டு ஆட ஆரம்பித்தனர். இவர்களையெல்லாம் வினோத ஜந்துவை பார்ப்பது போன்று சிவின் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு டான்ஸ் மாறத்தான் ஆரம்பித்தது. அதில் முதலாவது ஆக ஏடிகே மற்றும் ஜிபி முத்து சொடக்கு மேல பாட்டுக்கு குத்தாட்டம் போட்டனர்.

Also read : ஜனனியை கதறவிட்ட ஹவுஸ் மேட்ஸ்.. சைடு கேப்பில் கனகச்சிதமாய் காய் நகர்த்தும் போட்டியாளர்

இருவருக்குமே டான்ஸ் அவ்வளவாக தெரியாது என்றாலும் ஜி பி முத்துவின் நடனம் அனைவரையும் கவர்ந்ததால் அவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு கதை சொல்லும் டாஸ்க் ஆரம்பித்தது. அதில் முதலாவதாக சென்ற அசீம் பேசிக் கொண்டிருக்கும்போது பட்டனை தட்டி நேரம் முடிந்து விட்டது என்று துரத்தி விட்டனர். இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலயே என்ற ஏமாற்றத்துடன் அவர் வெளியில் சிரித்தபடி திரிந்து கொண்டிருந்தார். அவரை உட்கார வைத்து குயின்சி, ஷெரின் ஆகியோர் மீதி கதைய சொல்லுங்க என்று கேட்டனர். அவரும் சளைக்காமல் தன் கதையைக் கூறி அனைவரையும் அழ வைத்தார்.

அதை அடுத்து மணிகண்டன் மற்றும் தனலட்சுமி ஆட்டம் ஆரம்பித்தது. புதுப்பேட்டை படத்தில் வரும் வரியா என்ற பாடலுக்கு ஆடிய தனலட்சுமியை ஹவுஸ் மேட்ஸ் கண்ணை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் அவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு அடுத்து கிட்சன் ஏரியாவில் தனலட்சுமி, ஜனனி தன்னுடைய கதையை சொல்லும்போது நான் பட்டனை அழுத்தி விடுவேன் என்று தன் வஞ்சத்தை வெளிப்படையாக காண்பித்தார். உடனே மணிகண்டன் அவருடைய தவறை சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் விடாத தனலட்சுமி விவாதம் செய்வதிலேயே மும்முரமாக இருந்தார். இதை பார்த்த வீட்டின் தலைவர் ஜி பி முத்து அப்புறமா சண்டை போடலாம் இப்ப சமைக்கிற வேலைய பாருங்க என்று தலைவராக தன் கடமையை செய்தார். சிறிது நேரத்திலேயே ஜனனிக்கு பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் பேச ஆரம்பிக்கும் போதே எப்படா பட்டனை தட்டலாம் என்று காத்திருந்த விக்ரமன் வேகமாக எழுந்து வந்தார். அதை பார்த்த தனலட்சுமி பதறி அடித்துக் கொண்டு வந்து பட்டனை தட்டினார். தோழிக்கு ஆதரவாக ஆயிஷாவும் இன்னொரு பட்டனை தட்டி ஜனனியின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Also read : மணிகண்டனை ஓரம் கட்டி கலக்கிய தனலட்சுமி.. ஓவர் நைட்டில் ட்ரெண்டான சம்பவம்

இதனால் அவரை பிக்பாஸ் வெளியில் போக சொன்னார். இதை எதிர்பார்க்காத ஜனனி ஏமாற்றத்துடன் வெளியில் வந்தார். வந்தவர் என்னை பேசக்கூட விடலயே என்ற ரீதியில் கதறி அழ ஆரம்பித்தார். உடனே பதறிப்போன போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர். அங்கும் அசல் அவரை சமாதானப்படுத்துகிறேன் என்ற பெயரில் கட்டியிருந்த கைலியால் அவர் கண்ணை துடைத்து சேட்டை செய்து கொண்டிருந்தார். அதன் பிறகும் கூட ஜனனி சமாதானமாக முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.

அவருக்கு ஜிபி முத்து மற்றும் ராம் இருவரும் ஆறுதல் கூறி சிரிக்க வைக்க முயன்றனர். அதை தொடர்ந்து அசல் மற்றும் ராம் இருவருக்குமான டான்ஸ் போட்டி ஆரம்பித்தது. இதில் யார் சிறப்பாக ஆடினார்கள் என்பதை கண்டுபிடிப்பது பெரிய சிரமமாக இருந்தது. அந்த அளவுக்கு பிக் பாஸ் ஒரு பாட்டை போட்டால் இவர்கள் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தொடர்ந்து சிவின் மற்றும் மகேஸ்வரியும் பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பாடலுக்கு அழகாக ஆடினார்கள்.

இந்த ஆடல் பாடல்களுக்கு இடையே போட்டியாளர்களின் கண்ணீர் கதையும் கூறப்பட்டது. அதில் தனலட்சுமி தன் அம்மாவை பற்றி கூறிய போது ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கண்கலங்கியபடி அமர்ந்திருந்தனர். அந்த வகையில் அவருடைய கதை மற்றவர்களை போல் இல்லாமல் முழுமையாக கேட்கப்பட்டது. இருந்தாலும் அதில் பெரிய அளவு சுவாரஸ்யம் இல்லை. அதேபோன்று நிவாஸினியும் தன் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பற்றி மனம் உருகி பேசிக் கொண்டிருந்தார்.

அவருக்கும் முழுமையான வாய்ப்பு தரப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து பேச ஆரம்பித்த ஏடிகே இரண்டு வார்த்தை கூட பேசி இருக்க மாட்டார் உடனே கூட்டமாக ஓடி வந்து பட்டனை தட்டி அவரை துரத்தி விட்டனர். அடப்பாவிகளா என்ற ரேஞ்சுக்கு அவர் அமைதியாக வந்து தன்னிடத்தில் அமர்ந்து கொண்டார். இப்படியாக நேற்றைய எபிசோடில் சிலரின் கதைகள் நிராகரிக்கப்பட்டும், சிலரின் கதைகள் செவி சாய்க்கப்பட்டும் இருந்தது.

Also read : பிக்பாஸ் சீசன் 6 ஆண் போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம்.. முதல் இடத்தில் இருக்கும் பிரபலம்

Trending News