சர்ச்சையை கிளப்பிய வாடகைத்தாய் பிரச்சனை.. திசை திருப்ப பிளான் போடும் நயன்

கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் நயன்தாரா பற்றிய செய்தி தான் அதிகமாக இருக்கிறது. எப்போதுமே சர்ச்சைக்கு பெயர் போன இவர் தற்போது வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற செய்தியால் சட்ட ரீதியான பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன் என்று நயன்தாரா அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் அவர் பற்றி கடும் விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் இதைப் பற்றி எல்லாம் அவர் கொஞ்சம் கூட கவலைப்படவில்லையாம். ஏனென்றால் இப்படி ஒரு பூகம்பம் கிளம்பும் என்று அவர் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.

அதனாலேயே அவர் இப்போது எந்த விதமான பதட்டமும் இல்லாமல் இருந்து வருகிறார். மேலும் இந்த விவகாரத்தை பற்றி விசாரிக்க தமிழக அரசு மூன்று பேர் கொண்ட தனி குழுவை அமைத்திருக்கிறது. அதனால் நயன்தாரா தன்னுடைய வழக்கறிஞரிடம் இது பற்றி மட்டும் விவாதித்து கொண்டிருக்கிறார்.

அதற்கும் சரியான சான்றிதழ்கள் வைத்திருக்கும் படியால் சட்ட ரீதியாக இந்த பிரச்சனையை விட்டு எளிதில் வெளிவந்து விடலாம் என்ற நம்பிக்கையும் அவருக்கு இருக்கிறதாம். ஆனால் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் பெரும் அமளி துமளி பட்டுக் கொண்டிருக்கிறது.

அதை திசை திருப்புவதற்காக தான் நயன்தாரா தற்போது சூப்பராக ஒரு பிளான் போட்டுள்ளார். அதாவது அவருடைய அடுத்த பட அறிவிப்பை இந்த சமயத்தில் வெளியிட்டால் குழந்தைகள் பற்றிய இந்த பிரச்சினை மறைந்து போய்விடும் என்று அவர் கணக்கு போட்டு இருக்கிறார்.

அதனால் கூடிய விரைவில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளிவர இருக்கிறது. இதன் மூலம் அவர் ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளார். அதாவது இந்த அறிவிப்பு மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைத்துவிடும். அதேபோன்று அடுத்த படத்திற்கான பிரமோஷன் ஆகவும் அமையும் என்று அவர் பக்காவாக திட்டம் போட்டு வருகிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →