ராமராஜன் மறுத்த 5 இரண்டாம் பாக படங்கள்.. விஜய் மில்டனை விரட்டியடித்த வில்லுபாட்டுகாரன்

ராமராஜன் தற்போது சினிமாவில் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி உள்ளார். அந்த காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்த இருந்த ராமராஜன் தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று உறுதியாக இருந்ததால் பட வாய்ப்பு இழந்தார். அதுமட்டுமின்றி தான் நடித்து சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் ராமராஜன் மறுத்துள்ளார்.

கரகாட்டக்காரன் : கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் கரகாட்டக்காரன். இப்படத்தில் செந்தில், கவுண்டமணி இடையே ஆன நகைச்சுவை காட்சி பெரிய அளவில் பேசப்பட்டது. இளையராஜா இசையும் படத்திற்கு மேலும் வலு சேர்த்தது. இந்த படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிக்க ராமராஜன் மறுத்துவிட்டார்.

பாட்டுக்கு நான் அடிமை : சண்முகப்பிரியன் இயக்கத்தில் ராமராஜன், ரேகா, குஷ்பூ ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாட்டுக்கு நான் அடிமை. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார்கள். ஆனால் இதற்கு ராமராஜன் செவி சாய்க்கவில்லை.

ஊரு விட்டு ஊரு வந்து : கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கௌதமி, கவுண்டமணி மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான திரைப்படம் ஊரு விட்டு ஊரு வந்து. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இரண்டாம் பாகத்தையும் முயற்சி செய்யும்போது ராமராஜன் மறுத்துவிட்டார்.

காவலன் : யார் கண்ணன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் ஜிகே முருகேசன் தயாரிப்பில் 1990 இல் வெளியான திரைப்படம் காவலன். இப்படத்தில் ராமராஜன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார் ராமராஜன்.

கோலிசோடா 2 : விஜய் மில்டன் இயக்கத்தில் கோலிசோடா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது ராமராஜனை விஜய் மில்டன் அணுகியுள்ளார். ஆனால் அப்போது ராமராஜன் மறுத்ததால் வேறு நடிகர்களை வைத்து விஜய் மில்டன் கோலிசோடா 2 படத்தை இயக்கி இருந்தார்.