சமீபத்தில் ஜெயலலிதாவின் மரண அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டது. இதில் ஜெயலலிதா இறந்த தினம் மற்றும் நாள் முழுவதுமே மாற்றி சொல்லியிருப்பதாக அந்த ஆணையம் சசிகலா, கேஎஸ் சிவகுமார், விஜயபாஸ்கர், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேரை குற்றவாளிகளாக கை காட்டியது.
இதைத்தொடர்ந்து தற்போது அரசியல்வாதி, எழுத்தாளர் நடிகராக திகழும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த பழ. கருப்பையா சமீபத்திய அளித்த பேட்டியில் ஜெயலலிதா குறித்து படு கேவலமாக விமர்சித்திருக்கிறார்.
இப்போது ஜெயலலிதாவின் மரணத்தை குறித்து பல விஷயங்களை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு எம்ஜிஆர் இறந்த போது கூட, அவருடைய மனைவி ஜானகி மோரில் விஷத்தை கலந்து கொடுத்து எம்ஜிஆரை கொன்றுவிட்டதாக ஜெயலலிதா கிளம்பி விட்டதாக கூறுகிறார்.
ஆனால் அப்போது ஜெயலலிதாதான் உதட்டில் நஞ்சை தடவி எம்ஜிஆரை உறிஞ்ச வைத்து சாகடித்து விட்டார் என்றும் செய்திகள் வெளியானது. 20 வருடங்களுக்கு முன் எம்ஜிஆர் இறந்தபோது என்னென்ன மர்மங்கள் கிளம்பியதோ அதேபோன்றுதான் மீண்டும் ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் புதிது புதிதாக கிளம்புகிறது.
அப்போது ஜெயலலிதா காட்டிய அரசியலை தான் இப்போது அவருடைய சிஷ்யர்கள் அப்படியே செய்துகொண்டிருக்கிறார்கள் என்று பழ. கருப்பையா விமர்சிக்கிறார். இதன் பிறகு திமுகவை இரும்புக்கோட்டை என்று பேசியது மட்டுமல்லாமல் திமுகவிற்கு ஆதரவாக பேசும் பழ கருப்பையா, கொஞ்சம்கூட நாகரீகம் இல்லாமல் ஜெயலலிதாவை பற்றி கொச்சையாக பேசி பலரையும் மூஞ்சி சுளிக்க வைத்திருக்கிறது.
அதுமட்டுமின்றி ‘நாக்கில் நரம்பு இல்லாமல், அழுகிய பழம் பேசுகிறது. இவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்பதால் இவ்வாறு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றும் இவரது பேட்டியை கேட்ட பிறகு சிலர் கமெண்ட் செய்கின்றனர்.