ஒட்டுமொத்த இந்திய சினிமாவுக்கே சிம்ம சொப்பனமாக ரிலீசான படம் தான் பொன்னியின் செல்வன். இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான இந்த படம் முதல் நாளில் இருந்தே வசூலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்துடன் ரிலீஸ் ஆன தனுஷின் நானே வருவேன் திரைப்படம் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இப்படி தனிக்காட்டு ராஜா போல் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருந்த பொன்னியின் செல்வனுக்கு சோதனை காலமாக வந்தது தான் காந்தாரா என்னும் கன்னட திரைப்படம். பொன்னியின் செல்வன் ரிலீசான அதே செப்டம்பர் 30ல் காந்தாரா கன்னடத்தில் ரிலீஸ் ஆனது. இந்த படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றிப்படம் ஆனது.
பொன்னியின் செல்வன் ரிலீஸ் ஆகும் போதே பான் இந்தியா மூவியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என அத்தனை மொழிகளிலும் ரிலீஸ் ஆனது. ஆனால் காந்தாரா கன்னடத்தில் கிடைத்த ரீச்சுக்கு பிறகே மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ரிலீஸ் ஆனது. எனினும் இப்போது பொன்னியின் செல்வன் வசூலை முறியடித்து இருக்கிறது.
தமிழ் மற்றும் மலையாளத்தில் பொன்னியின் செல்வன் பெற்ற வசூலை ஒப்பிடும் போது, ஹிந்தி மற்றும் தெலுங்கில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை. ரிலீஸ் ஆகி இதுவரையிலும் தெலுங்கில் கிட்டத்தட்ட 18 கோடியும், ஹிந்தியில் கிட்டத்தட்ட 23 கோடியும் வசூல் செய்திருக்கிறது.
Also Read: காந்தாரா ஹீரோக்கு போன் போட்ட ரஜினி.. வாய்ப்பை வைத்து பக்காவாக ஸ்கெட்ச் போட்ட இயக்குனர்
காந்தாரா பொன்னியின் செல்வனுக்கு பிறகு ரிலீஸ் ஆகி இருந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் இதுவரை தெலுங்கில் 30 கோடியும், ஹிந்தியில் 31 கோடியும் வசூலித்திருக்கிறது. தற்போதும் தியேட்டர்களில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.
‘கே ஜி எஃப்’ திரைப்படத்தைத் தயாரித்த நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்து ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படம் காந்தாரா. இந்த படம் ஸ்லோ பிக்கப் முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாகி இன்று நம்பர் ஒன் ட்ரெண்டில் இருக்கிறது. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தை பாராட்டி இருந்தார்.
Also Read: மீண்டும் பொன்னியின் செல்வனை சீண்டி பார்க்கும் காந்தாரா.. எதிர்பார்ப்பை கிளப்பிய அடுத்த கட்ட மோதல்