காலையில் எழுந்தவுடன் எது செய்கிறோமோ இல்லையோ முதலில் போனை எடுத்துப் பார்ப்பதை தான் வழக்கமாக வைத்துள்ளார்கள். அதுமட்டுமின்றி இரவு தூங்கும் போதும் போனை பார்த்துவிட்டு தான் படுக்கிறார்கள். பிக் பாஸ் வீடு தவிர யாராலும் தற்போது மொபைல் போன் இல்லாமல் இருக்க முடியவில்லை.
அதற்கு ஏற்றார் போல் மொபைல் போனில் நிறைய புதிய செயலிகள் உருவாகி வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை தொடர்ந்து அதிக பயனாளர்கள் பயன்படுத்தும் செயலி ட்விட்டர். கடந்த 2006 ஆம் ஆண்டு பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ் மற்றும் நோவா கிளாஸ் ஆகியோருடன் ஜாக் டோர்சி ட்விட்டர் செயலியை நிறுவினார்.
மேலும் கடந்த 2015 இல் இருந்து ஜான் டோர்சி ட்விட்டர் சிஇஓ பதவியை வகித்து வந்தார். ஆனால் சமீபத்தில் ட்விட்டர் முதலீட்டாளர்கள் அழுத்தம் கொடுத்ததால் இந்த பதவியில் இருந்து ஜாக் டோர்சி ராஜினாமா செய்தார். இதை அடுத்து உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார்.
தற்போது இவருக்கு போட்டியாக ட்விட்டர் முன்னாள் சி இ ஓ ஜாக் டோர்சி புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டம் தீட்டி உள்ளார். அதாவது புளூ ஸ்கை என்று அந்த செயலிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயலியை ஒரே தளத்தில் இயக்கப்படுவதற்கு பதிலாக பல தளங்களில் பயன்படுத்தலாம்.
Also Read :தளபதி வேண்டாம், பிக் பாஸ் நடிகர் போதும்.. திருமணத்திற்க்கு பின் ஹரிஷ் கல்யாணுக்கு அடித்த ஜாக்பாட்
அதுவும் மிகவும் பாதுகாப்பான செயலியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் எந்த தயக்கமும் இன்றி புளூ ஸ்கை செயலியை பயன்படுத்தலாம் என்று இந்நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. மேலும் பயனாளிகள் சுலபமாக தங்களின் தரவை மீட்டெடுக்க முடியும்.
இதில் பல சிறப்பம்சம் கொண்ட விஷயங்கள் உள்ளடங்கி உள்ளது. மிக விரைவில் பயனாளிகள் பயன்பாட்டிற்கு புளூ ஸ்கை செயலி வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம். இதனால் ட்விட்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. இந்த செயலியின் மூலம் எலான் மஸ்கை பழிக்குப் பழி வாங்க உள்ளார் ஜாக் டோர்சி.
Also Read :டூப் போட வந்து ஹீரோயின் ஆன நடிகை.. ரசிகர்களை கிறங்கடித்த 90ஸ் கிட்ஸின் கவர்ச்சி கன்னி