வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட கதிர்-முல்லை.. பாண்டியன் ஸ்டோரில் நடக்கும் அடுத்தடுத்து ட்விஸ்ட்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 5 லட்சத்தை திருப்பி தருவேன் என்ற சபதத்துடன் வெளியேறிய கதிர்-முல்லை இருவரும் அதை சம்பாதிக்க படாத பாடு படுகின்றனர். இதனால் அவர்கள் ஆரம்பித்த தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை.

இதனால் முல்லை எதார்த்தமாக நியூஸ் பேப்பரில் தம்பதியருளுக்காக நடத்தும் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்திருக்கிறார். அதில் மட்டும் வெற்றி பெற்றால் 10 லட்சம் பரிசுத்தொகை கிடைக்கும் என்பதற்காக கதிரையும் ஒரு வழியாக சம்மதிக்க வைத்து அந்தப் போட்டிக்கு அழைத்து செல்கிறார்.

Also Read: ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அந்த தருணம்.. களை கட்ட போகும் இன்றைய பிக்பாஸ் எபிசோட்

இவர்கள் இருவருக்கும் புரிதல் அதிகமாக இருப்பதால் ஒரு சில சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதியில் தேர்வான நான்கு ஜோடிகளில் ஒருவராக மாறி உள்ளனர். அங்கு இருக்கும் ஃபேமஸ்ஜோடிக்கு கதிர்-முல்லை பயங்கர டஃப் கொடுக்கிற ஜோடியாக மாறிவிட்டது.

இதனால் கதிர்-முல்லை இருவரையும் தோற்கடிக்க அவர்கள் தீவிரமாக செயல்படுகின்றனர். இந்த சமயத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வாங்கி இருக்கும் இடத்தின் பத்திரப் பதிவுக்கு கதிர் செல்ல விரும்புகிறார். இதனால் போட்டியில் இனி தொடர விரும்பாமல் பாதியிலேயே கிளம்ப பார்க்கிறார்.

Also Read: குறும்படம் போட்டு எல்லாரையும் ரோஸ்ட் செய்த ஆண்டவர்.. வீட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்ட நபர் இவர்தான்

ஆனால் போட்டியை நடத்துபவர்கள் கதிர்-முல்லை இருவரையும் போக விட மாட்டார்கள். மேலும் முல்லையும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் 10 லட்சம் கிடைக்கும். இதன் மூலம் அவர்கள் வாங்கிய 5 லட்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு குடும்பத்துடன் இணைந்து விடலாம் என்றும் முல்லை பார்க்கிறார்.

எப்படியாவது இறுதிச்சுற்றில் பங்கேற்க வைத்து வெற்றி தொகையுடன் குடும்பத்தை சென்று பார்த்தால் வீடு கட்டுவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என தெறித்து ஓடும் கதிரை  சமாதானப்படுத்தி இறுதி சுற்றில் முல்லை பங்கேற்க வைத்து வெற்றியும் பெறுவார்.

Also Read: கோபிக்கு தரமான சவுக்கடி கொடுத்த பாக்யா.. இனிமேதான் சம்பவம் இருக்கு

Trending News