சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

ரெண்டே படம் பாலிவுட்டிலே செட்டிலாகும் அட்லீ.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்

இளம் இயக்குனரான அட்லீ தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வந்துள்ளார். இவரது அறிமுகப்படமான ராஜா ராணி படத்தை தொடர்ந்த தளபதி விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றி படத்தை அட்லீ கொடுத்திருந்தார். இப்போது பாலிவுட் வசம் சென்றுள்ளார்.

அதாவது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் பிரியாமணி, நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஜவான் படம் திரைக்கு வர இருக்கிறது.

Also Read : பொன்னியின் செல்வனை விட டபுள் மடங்கு வியாபாரமான ஜவான்.. பாலிவுட்டில் கெத்து காட்டும் அட்லீ

ஜவான் படத்தை முடித்த கையோடு தளபதி விஜய் உடன் மீண்டும் அட்லீ இணைய போவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது பாலிவுட்டிலேயே செட்டிலாகும் திட்டத்தை வைத்திருப்பார் போல அட்லி. அதாவது பாலிவுட்டில் டாப் ஸ்டாரான சல்மான்கான் இடம் அட்லீ ஒரு கதை கூறியுள்ளாராம்.

சல்மான் கானுக்கு இந்த கதை ரொம்ப பிடித்து போக படத்தில் நடித்த ஒப்புக்கொண்டாராம். இதனால் விரைவில் இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். அதாவது பாலிவுடில் ஒரு படத்தை இயக்கி விட்டு மீண்டும் தமிழ் படம் பக்கம் அட்லீ வந்துவிடுவார் என பலரும் எதிர்பார்த்தனர்.

Also Read : லாஜிக்கே இல்லாமல் சீனை வைத்த அட்லீ.. விழுந்து விழுந்து சிரித்த பட குழு

ஆனால் இவருக்கு மட்டும் அதிர்ஷ்டம் கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுவது போல டாப் நடிகர்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது. அதாவது தமிழில் மாஸ் ஹீரோவான விஜய் படத்தை இயக்கிய அட்லீ பாலிவுட்டில் அறிமுக படத்திலேயே ஷாருக்கான் வைத்து இயக்கினார்.

இப்போது சல்மான் கான் படத்தை இயக்க உள்ளார். இவ்வாறு டாப் நடிகர்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு எல்லா இளம் இயக்குனர்களுக்கும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் அட்லிக்கு உள்ள அதிர்ஷ்டம் தொடர்ந்து மாஸ் ஹீரோகளின் படத்தை இயக்கி வருகிறார்.

Also Read : தமிழ் படங்களை ஒதுக்கி அக்கட தேசத்திற்கு பறந்த 5 இயக்குனர்கள்.. பாலிவுட் வரை பட்டையை கிளப்பும் அட்லி

- Advertisement -spot_img

Trending News