ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விவாகரத்து நடிகைக்கு வலை விரிக்கும் இளம் ஹீரோ.. கடுப்பில் இருக்கும் காதலி

திருமணம் ஆகாத இளம் ஹீரோ ஒருவர் விவாகரத்து ஆன ஒரு நடிகைக்கு ரூட்டு விட்டுக் கொண்டிருக்கிறாராம். எங்கு போனாலும் நடிகையைப் பற்றியே புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் அவரைப்பற்றி தான் தற்போது திரையுலகில் ஒரே பேச்சாக இருக்கிறது.

தெலுங்கு திரை உலகில் பிரபல ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் இருக்கின்றனர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த லிகர் திரைப்படத்தால் நொந்து போய் இருக்கும் விஜய் தேவர கொண்டா அடுத்ததாக நடித்துள்ள குஷி திரைப்படத்தை தான் பெரிதும் நம்பி இருக்கிறார்.

Also read : விசித்திர நோய்க்கு மருந்து இல்லாமல் தவிக்கும் சமந்தா.. எதிரிக்குக் கூட இந்த நிலை வரக்கூடாது

இந்நிலையில் இவர் தற்போது சமந்தாவை பற்றி வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கிறாராம். குஷி திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருக்கிறது. அதை வைத்து தான் இவர் தற்போது சமந்தாவுக்கு ரூட்டு போட்டு வருவதாக திரையுலகில் கிசுகிசுத்து வருகின்றனர்.

சமந்தாவின் திருமண வாழ்வை பற்றி கூறும் இவர் எனக்கு அவங்களை முதல் படத்திலிருந்து ரொம்ப பிடிக்கும். ஆனால் அவருடைய திருமண வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று ரொம்பவும் வருத்தத்தோடு கூறுகிறாராம். அது மட்டுமில்லாமல் சமந்தா பாணா காத்தாடி திரைப்படத்தில் ரொம்பவும் க்யூட்டாக இருப்பார்கள் என்று அவர் விடும் ஜொள்ளால் சினிமா இண்டஸ்ட்ரியே மிதந்து கொண்டிருக்கிறதாம்.

Also read : நல்ல பெயர் எடுக்க விஜய் தேவரகொண்டா செய்த கேவலமான செயல்.. நம்பியவர்களுக்கு வைத்த ஆப்பு

ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் இடையே காதல் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் அந்த இரு ஜோடிகளும் பொதுவெளியில் சுற்றி திரியும் போட்டோக்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட இவர்கள் மாலத்தீவுக்கு சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் தேவரகொண்டா ஓவராக சமந்தாவை இப்படி புகழ்ந்து பேசுவது ராஷ்மிகாவுக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளது. காதலியின் இந்த கோபத்தை பார்த்த விஜய் தேவரகொண்டா நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று சரண்டர் ஆகி விட்டாராம்.

Also read : விஜய் தேவரகொண்டா ரசிகர்களை எச்சரித்த நடிகை.. ஒரு அளவுக்கு தான் பொறுமை

Trending News