சினிமாவில் செல்வாக்கும் மிகுந்த குடும்பத்திலிருந்து வந்த நடிகர் தான் அவர். முன்னணி நடிகராக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு தன்னுடன் நடித்த அந்த நடிகையின் மீது காதல் ஏற்பட்டு இருக்கிறது. இத்தனைக்கும் அந்த நடிகர் ஏற்கனவே திருமணம் ஆனவர்.
ஆனாலும் நடிகையின் அழகில் மயங்கிய அந்த நடிகர் அவருக்காக தனியாக வீடு எடுத்துக் கொடுத்து குடும்பம் நடத்தும் அளவுக்கு மயங்கி போய் கிடந்துள்ளார். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்கள். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுடைய அந்தரங்க விவகாரமும் மீடியாவில் பரவ ஆரம்பித்தது.
Also read : காசுக்காக படுக்கையை பகிர சொன்ன நடிகையின் அம்மா.. பாதுகாப்பாக அரவணைத்த பிரபலம்!
ஆனாலும் அவர்கள் இருவரும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தங்கள் காதலை வளர்த்து வந்திருக்கின்றனர். இது அப்போதைய பத்திரிகைகளில் கிசுகிசுவாக வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி சென்று கொண்டிருந்த அவர்களுடைய அந்தரங்க வாழ்க்கை ஒரு நாள் கடும் சண்டையில் முடிந்திருக்கிறது. அழகு புயலாக இருந்த அந்த நடிகை ராட்சசியாக மாறி இருக்கிறார்.
அதாவது அந்த நடிகர் தன்னுடைய மனைவியை பார்ப்பதற்காக தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நடிகையிடம் கூறி இருக்கிறார். இதனால் கடும் கோபம் அடைந்த அந்த நடிகை நடிகரை அடித்து வீட்டை விட்டு வெளியில் தள்ளி இருக்கிறார். எப்படி நீ உன் மனைவியை பற்றி பேசலாம், என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று தன்னுடைய மொழியில் பேசிய படியே அவர் நடிகரை லுங்கியோடு விரட்டி இருக்கிறார்.
Also read : அக்ரிமெண்ட் போட்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்த முதலாளி.. நடிகைகளை மிரட்டியே கட்டுப்பாட்டில் வைத்த கொடூரம்
மிகவும் சாதுவான அந்த நடிகர் நடிகையின் இந்த ஆக்ரோஷத்தை தாங்க முடியாமல் கண் கலங்கிய படியே நடுரோட்டில் நின்று இருக்கிறார். தன்னுடைய கார் நடிகையின் வீட்டில் மாட்டிக்கொண்டதால் அவரால் தன் வீட்டிற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு நடிகர் தன் நண்பருக்கு போன் செய்து ஒரு காரை ரெடி செய்து தன் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
இப்படியாக ஆரம்பித்த அவர்களுடைய சண்டை ஒரு நாள் பிரேக்கப்பில் முடிந்து இருக்கிறது. ஆனாலும் மனதில் வன்மத்துடன் இருந்த அந்த நடிகை நடிகரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே மீடியாவில் பிரபலமாக இருந்த இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது அந்த நடிகை குழந்தை குட்டியுடன் வாழ்ந்து வருகிறார். இயல்பாகவே மிகவும் கோபக்காரரான அந்த நடிகை இப்படி பஜாரி போல் நடந்து கொண்டது அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also read : காமெடி நடிகர் முகத்தில் சிகரட்டை ஊதிய சைக்கோ நடிகை.. கழுத்தைப் பிடித்து தள்ளிய இயக்குனர்