செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

12 வயதில் கதாநாயகி, 17 வயதில் நான்காவது மனைவி.. நம்பிக்கை துரோகத்தால் திசைமாறிய வாழ்க்கை!

தமிழ் சினிமாவில் நிறைய நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியுள்ளனர். அதில் அஞ்சு ஒன்று அனைவரும் அறிந்த நடிகை அஞ்சு இவர் தனது ஒன்றரை வயதில் இயக்குனர் மகேந்திரன் கண்ணில் பட்டதால் உதிரிப்பூக்கள் என்ற படத்தில் நடிக்க வந்தவர். 

இவர் தனது 12 வயதில் கதாநாயகியாக கேளடி கண்மணி என்ற திரைப்படத்தில் ராதிகாவுடன் சேர்ந்து  நடித்தார். இவரது சினிமா வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த காலகட்டம் அது. இவர் சிறந்த நடிகையாக கேரளாவில் சிறப்பு விருது வாங்கியவர். அனைத்து திரைப்படங்களிலும் எதார்த்தமான நடிப்பை வழங்கக் கூடியவர்.

Also Read : மனைவி ஆகாமலேயே கமலின் மயக்கத்தில் இருந்த 5 நடிகைகள்.. வயசானாலும் தலைவன் கெத்துதான்!

இவருக்கும் அந்த காலகட்டத்தில் கிசுகிசுக்கள் மற்றும் #MeeTo போன்ற பிரச்சனைகள் அப்போதே இருந்து வந்தது. படப்பிடிப்பு தளத்தில் இரவு நேரங்களில் இவர் கதவை தட்டுவது இவரை தவறாக பேசுவது, தவறான எண்ணத்தில் கூப்பிடுவது என்று பல கஷ்டங்களுக்கு ஆளானார். ஆனால் இவருக்கு துணையாக இவரது அப்பாவும் 2 அண்ணன்களும் இருந்ததால் அதில் சிக்காமல் தப்பித்தார்.

தனது 17வது வயதில் கன்னட  நடிகர் டைகர் பிரபாகரனை காதலித்து வந்தார் அவரது வயது அஞ்சுவின் அப்பாவை விட வயது அதிகம் வீட்டில் சண்டை போட்டு எப்படியோ திருமணம் செய்து கொண்டார். பிரபாகரனுக்கு ஒரு மனைவி ஒரு குழந்தை அந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள இவர் திருமணம் செய்துகொண்டார்.ஆனால் திருமணம் ஆன பிறகு அவரது வீட்டில்  அதிக வயதில் மகன்கள் இருந்ததாக கூறப்படுகிறது அப்போதுதான் அவருக்கு தெரியும் பிரபாகரனுக்கு அஞ்சு 4 மனைவி என்று வேறு வழியில்லாமல் வாழ்ந்து வந்தார். மகன் பிறந்த மூன்றாவது மாதத்திலேயே அவர் தன் கணவரை பிரிந்து அம்மாவுடன் சென்று விட்டார்.

Also Read : மேடையில் ஜெயலலிதாவை ஓவர்டேக் செய்த கவர்ச்சிப் புயல்.. பத்து பைசா கொடுக்காமல் விரட்டியடித்த சம்பவம்

பின்னர் வேறு திருமணம் செய்யாமல் தன் குழந்தைக்காக தனியாக வாழ்ந்து அந்த குழந்தையை நல்ல முறையில் வளர்த்து வந்தார். பிரபாகரன் இறந்ததை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்று அவரே கூறியிருக்கிறார். இப்பொழுது அந்த ஆண் குழந்தைக்கு 18 வயதாகிறது. தற்போது அஞ்சுவை மகன் பார்த்துக் கொள்கிறார்.

இவரைப் போன்று பல நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக மாறி தற்போது மிகப்பெரிய இடத்தில் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அஞ்சுவிற்கு  சரியான திருமணம் வாழ்க்கை அமையாததால் இவரது வாழ்க்கையும் மற்றும் சினிமா வாழ்க்கையும் சரியான முறையில் அமையவில்லை இன்றுவரை கஷ்டப்பட்டு எப்படியோ வாழ்ந்து வருகிறார். ஒரு பெரிய நடிகைக்கு இப்படி ஒரு வாழ்க்கை என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக இன்று வரை இருந்து வருகிறது. 

Also Read : கல்யாணம் ஒரு மேட்டரே இல்ல என சாதித்துக் காட்டிய நடிகைகள்.. 30 படங்களில் நடித்த ஒரே ஹீரோயின்

Trending News