பொல்லாதவன் கிளைமாக்ஸ் இந்த படத்தின் காப்பி தான்.. மட்டமான வேலையால் வருந்திய வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் நல்ல கதைகளை கொடுக்க நிறைய இயக்குனர்கள் இருந்தாலும் ஒரு சில இயக்குனர்களின் கதைகள் மட்டும் சினிமாவை தாண்டி ரசிகர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட இயக்குனர்களில் ஒருவர் தான் வெற்றிமாறன். சினிமா என்னும் மாயாஜாலத்தை தாண்டி இவர் கதைகளில் உயிர் இருக்கும்.

இயக்குனர் பாலுமகேந்திராவிடம் ‘கதை நேரம்’ என்னும் தொலைக்காட்சி தொடரில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவர் இதுவரை இயக்கியது மொத்தம் 5 படங்கள். அந்த ஐந்தில் 2 படங்கள் தேசிய விருது வாங்கியிருக்கின்றன. வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வெளிவரும் படங்கள் அத்தனையுமே கோலிவுட்டின் மைல்கல்.

Also Read: இப்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா.. வெற்றிமாறனை டீலில் விடும் விஜய்

இவர்கள் இருவரது கூட்டணியில் முதன் முதலாக வெளியான திரைப்படம் தான் பொல்லாதவன். மேலும் இதுதான் வெற்றிமாறனின் முதல் படமும் ஆகும். இந்த படம் தனுஷுக்கும் சரி, வெற்றிக்கும் சரி ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்த படத்தை பற்றி யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை பகிர்ந்து இருக்கிறார் வெற்றி.

பொல்லாதவன் படத்தில் தனுஷுக்கும், டேனியல் பாலாஜிக்கு இறுதியில் ஒரு சண்டை காட்சி இருக்கும். இந்த காட்சி ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது கடைசி சண்டை காட்சிக்கு வெறும் மூன்று நாட்கள் மட்டுமே இருந்ததால் வேறொரு நைஜீரிய படத்தின் சண்டை காட்சியை அப்படியே காப்பி அடித்து விட்டார்களாம்.

Also Read: பெரும் பிரச்சனை பண்ண போகும் வெற்றிமாறன்.. வடசென்னையால் இடியாப்பச் சிக்கலில் தனுஷ்

எப்போதுமே ஒரு படத்தின் இயக்குனர் இவ்வளவு வெளிப்படையாக இப்படி காப்பி அடித்ததை எல்லாம் சொல்ல மாட்டார்கள். ஆனால் வெற்றிமாறன் இதை ஒரு நேர்காணலில் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். மேலும் தான் அதுபோல் செய்திருக்க கூடாது என இதுவரை மனம் வருந்திக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இனி எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் இப்படி செய்ய மாட்டான் எனவும் கூறியிருக்கிறார்.

பொல்லாதவன் திரைப்படம் இளைஞர்களை வெகுவாகவே கவர்ந்தது. இளைஞர்களுக்கு பைக் என்பது எவ்வளவு பெரிய கனவு என்பதை ரொம்ப எதார்த்தமாக சொல்லியிருந்தார் வெற்றிமாறன். புதுப்பேட்டைக்கு பிறகு கொஞ்சம் சறுக்கிய தனுஷை தூக்கி நிறுத்திய திரைப்படம் பொல்லாதவன். அதன் பின்னர் வெற்றிமாறனுடன் இணைந்து தனுஷ் வடசென்னை, அசுரன் படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.

Also Read: மறக்கமுடியாத கதாபாத்திரத்தை தவறவிட்ட 5 நடிகர்கள்.. தனுஷின் வெற்றி படத்தை இழந்த சிம்பு