சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

கலைஞர் கருணாநிதிக்கும் எனக்கும் உள்ள உறவு.. ஆனந்த கண்ணீர் விட்ட பிரபு!

நடிகர் பிரபு 80 காலகட்டத்தில் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். அதன்பின் அப்பா கதாபாத்திரம், துணை நடிகர் கதாபாத்திரம் என பல கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சேனாதிபதியாக நடித்து பிரபலமானார்.

இதனிடையே நடிகர் பிரபு தனது பள்ளி காலத்தில் கலைஞர் கருணாநிதி அவர்களை சந்தித்த நெகிழ்ச்சியான தருணத்தை பகிர்ந்துள்ளார். நடிகர் பிரபு தனது பள்ளிக்காலத்தை பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த நிலையில், அப்போது கலைஞர் அவர்கள் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு வந்து தங்கியிருந்தாராம்.

Also Read : விரக்தியில் திரைத்துறையே வேண்டாம் என ஒதுங்கிய கலைஞர்.. சமாதானப்படுத்திய எம்ஜிஆர்

அவர் வந்திருப்பதை அறிந்து கொண்ட பிரபு, பள்ளிக்கூடத்தை கட் அடித்துவிட்டு அவரை பார்க்க நேராக அந்த ஹோட்டலுக்கு சென்றாராம். அப்போது கலைஞரின் உதவியாளரிடம் நான் அப்பாவை பார்க்க வேண்டும் என கேட்டதாகவும் கலைஞர் அவர்கள் ரெஸ்ட் எடுத்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்களாம்.

பிறகு அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த பிரபுவை பார்த்த கலைஞர் கருணாநிதி, ஹே பிரபு, வாப்பா எப்படி இருக்க என பிரபுவை அழைத்து பேசினாராம். அப்போது ஸ்கூலை கட் அடித்துவிட்டு வந்ததால் தன்னை செல்லமாக கண்டித்தாகவும், சாப்டியா என கேட்டதாகவும் பிரபு தெரிவித்தார். மேலும் தான் தங்கியுள்ள இந்த ஹோட்டலில் சாம்பார் வடை எல்லாம் சூப்பராக இருக்கும் நீயும் சாப்பிடுறியா என கேட்டராம் கலைஞர்.

Also Read : எம்ஜிஆரை பழிவாங்க கலைஞர் செய்த செயல்.. அமைதி காத்த எம்ஜிஆர் காரணம் தெரியுமா?

அதன்பின் அவர் அதை வாங்கி கொடுத்து பிரபுவை சாப்பிட வைத்த பின் நான் கிளம்புவதாக சொல்லியுள்ளாராம் பிரபு. உடனே கலைஞர் அவர்கள், தனக்கு அருகில் இருந்த புத்தகங்களில் ஒரு புத்தகத்தை பிரபுவை எடுக்க சொன்னாராம். அதில் ஒரு புத்தகத்தை எடுத்து அன்புள்ள என் மகனுக்கு பெரியப்பாவின் பரிசு என அதில் கலைஞர் எழுதினாராம்.

அதுமட்டுமில்லாமல் கலைஞர் அவர்களின் கிறுக்கலான கையெழுத்தை அந்த புத்தகத்தில் போட்டு தனக்கு கொடுத்தார் என நெகிழ்ச்சியுடன் பிரபு பகிர்ந்து கொண்டார். நடிகர் சிவாஜி கணேசன் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அரசியலில் ஈடுபட்டிருந்தார். அண்ணாவின் கட்சி திமுக, அதிமுக என இரண்டாக பிரிந்த போது சிவாஜி கணேசன் அவர்கள், கலைஞர் கருணாநிதியுடன் இணைந்து கட்சியில் சில ஆண்டுகள் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : டி ராஜேந்தரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய எம்ஜிஆர்.. கூடுவிட்டு கூடு பாய்ந்த ரகசியம்

- Advertisement -spot_img

Trending News