சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

அது மட்டும் வரட்டும் உன்ன வச்சிக்கிறேன்.. பாரதியைப் பைத்தியம் பிடிக்க வைத்த கண்ணம்மா

கிளைமாக்ஸில் இருக்கும் விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலை சின்னத்திரை ரசிகர்கள் அனுதினமும் தவறாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பாரதியிடம் வளரும் கண்ணம்மாவின் மகளான ஹேமா பாரதியை உதறி எறிந்து விட்டு அம்மாவுடன் கிளம்பி விட்டார்.

இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பாரதி பைத்தியம் பிடித்தவர் போல் மாறிவிட்டார். இவ்வளவு நாள் பாசத்துடன் வளர்த்த ஹேமா தன்னை விட்டு பிரிந்து அம்மா தான் முக்கியம் என நினைத்து விட்டாரே! என்றும் அவர் கலங்குகிறார். அதுமட்டுமின்றி குடும்பமே இப்போது பாரதி மீது வெறுப்புடன் இருக்கிறது.

Also Read: மீண்டும் அதே கதையை உருட்டும் இயக்குனர்.. விடாமல் சொறிஞ்சி தள்ளும் பாரதி கண்ணம்மா

ஏனென்றால் பாரதி யாருக்கும் தெரியாமல் வெண்பாவை திருமணம் செய்து கொள்ள கோயிலுக்கு வரை சென்றிருக்கிறார். கடைசி நேரத்தில் கண்ணம்மா தான் அந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்தினார். எதற்காக வெண்பாவை திருமணம் செய்து கொள்ள துணிந்தாய்? எனக் குடும்பமே அவரை கேள்வி கேட்டபோது, வெண்பாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்காக தான் என்று சொன்னார்.

அதன் பிறகு அந்த குழந்தைக்கு அப்பா ரோஹித் என தெரிந்து, அவரை வெண்பாவிற்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். திருமணத்திற்கு பிறகும் வெண்பா பாரதியை மறக்க முடியாமல் அவரை டார்ச்சர் செய்கிறார். இந்த சூழலில் ஹேமா பாரதியை விட்டு சென்றதால் அவருடைய அறையில் இருக்கும் பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்கி தன்னுடைய கோபத்தை வெளிக்காட்டுகிறார்.

Also Read: கிளைமாக்ஸ் நோக்கி பாரதி கண்ணம்மா.. படையப்பா நீலாம்பரி ரேஞ்சுக்கு சவால் விடும் வெண்பா

அந்த சமயம் பாரதியின் தம்பி அகிலன் அவரிடம் போய் பேசுகிறார். அப்போது பாரதி தனக்கும் ஹேமா, லக்ஷ்மி இரண்டு குழந்தைகளுக்கும் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டதாகவும், அந்த டெஸ்ட் ரிசல்ட் மட்டும் வந்தால் கண்ணம்மாவின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்று வெறிகொண்டு காத்திருக்கிறார்.

ஆனால் அப்போதும் பாரதிக்கு தான் மூக்கு உடைய போகிறது. அந்த டெஸ்ட் ரிப்போர்ட்டில் இரண்டு மகள்களும் தனக்கு தான் பிறந்தது என்ற உண்மை பாரதி தெரிந்து கொண்ட பின் கண்ணம்மாவை இவ்வளவு நாள் கஷ்டப்படுத்தியதை நினைத்து கலங்குவார். ஒரு வழியாக பாரதி கண்ணம்மாவுடன்  தன்னுடைய இரண்டு மகளுடன் சேர்ந்து வாழ போகிறார். அத்துடன் இந்த சீரியலும் நிறைவு பெறப்போகிறது.

Also Read: எகிறிய சன், விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்.. நீண்ட நாட்களுக்கு பின் விட்ட இடத்தை பிடித்த பாரதிகண்ணம்மா

Trending News