செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மிஷ்கினின் ஆணவத்தை அடக்கிய இயக்குனர் மகிழ் திருமேனி.. கலகத் தலைவன் படவிழாவில் நடந்த சம்பவம்

இயக்குனர் மிஷ்கின் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் பல முக்கியமான படங்களின் ஆடியோ லான்ச் மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். ஏனென்றால் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மிஷ்கின் பார்க்கப்படுகிறார்.

ஆனால் இவ்வாறு மேடைப்பேச்சுகளில் மிஷ்கின் சில ஏடாகூடமான விஷயங்களை பேசி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் படத்தின் விழா நடைபெற்றது.

Also Read : இளையராஜாவுடன் இதுவரை சேராத பிரபலம்.. கட்டாயப்படுத்தி கூட்டணி அமைத்த மிஷ்கின்

மகிழ்த்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் சிலரை அவமானப்படுத்தும் விதமாக பேசி இருந்தார்.

முன்பு விஜய் ஆண்டனி படத்தை பார்த்ததில்லை என்று கூறி அவமானப்படுத்தி இருந்தார். அதேபோல் மகிழ் திருமேனி படத்தை பார்த்ததில்லை என்று அவமானப்படுத்தி பேசி இருந்தார் மிஷ்கின். அப்போது இயக்குனர் மகிழ் திருமேனியின் முகம் வாடியது. இந்நிலையில் அவர் பேசும் போது மிஷ்கினின் அனைத்து படத்தையும் நான் பார்த்து இருக்கிறேன் என கூறியிருந்தார்.

Also Read : எல்லோரையும் அசிங்கப்படுத்திய மிஷ்கின்.. மொத்தமாக நாரடித்த பயில்வான்

மேலும் எனக்கு மிஷ்கின் தான் இன்ஸ்பிரேஷன் என்று சொல்லி அவரின் வாயை அடைத்துள்ளார். இப்போதாவது ஒருவரை அவமானபடுத்தும் போது அவருடைய வழி எப்படி இருக்கும் என்பதை மிஷ்கின் புரிந்து கொண்டிருப்பார். தற்போது மகிழ் திருமேனி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இனிமேல் மிஷ்கின் பட விழாவில் மேடையில் பேசும்போது இதுபோன்ற அநகரீகமாக பேசுவாரா என்பது சந்தேகம்தான் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூறி வருகிறார்கள். மிஷ்கினுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார் மகிழ்த்திருமேனி என்று அங்கு பேசிக்கொண்டுள்ளனர்.

Also Read : ஆணவ பேச்சால் பெயரைக் கெடுத்துக் கொண்ட மிஷ்கின்.. மைக்க பிடிச்சாலே சர்ச்சை தான்!

Trending News