திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

படக் காட்சிக்காக தாலி கட்டிய நடிகர்.. அதீத காதலால் கழட்ட மறுத்த நடிகை

சினிமாவை பொறுத்தவரை திருமணம், தாலி கட்டுவது போன்ற காட்சிகள் எல்லாம் ஒரிஜினலாக காட்டப்பட்டாலும் காட்சி முடிந்த பிறகு அந்த தாலியை கழட்டி விடுவார்கள். ஆனால் சக நடிகரின் மேல் இருந்த காதலால் அவர் கட்டிய சினிமா தாலியை கூட பொக்கிஷம் போல் பாதுகாத்த நடிகையும் அந்த காலத்தில் இருந்திருக்கிறார்.

அந்த காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தவர் தான் அந்த நடிகர். அவருடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்த அந்த நடிகைக்கு நடிகர் மீது தீராத காதல் இருந்தது. நடிகருக்கும் அந்த நடிகையின் மேல் ஒருவித பாசம் இருந்தது உண்மைதான். அதனாலேயே அவர்கள் இருவரும் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்கள்.

Also read: அப்பாவுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யப் போன நடிகை.. இறுதிச் சடங்குக்கு காசு இல்லாமல் தவித்த சோகம்

சொல்லப்போனால் அவர்களுடைய ஜோடி பொருத்தம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது. அவர்கள் நிஜ வாழ்விலும் திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்களும் அப்போது இருந்தார்கள். ஆனால் விதியின் வசத்தால் அந்த ஜோடி திருமண வாழ்வில் இணையாமல் போனது.

ஒருமுறை நடிகர் பட காட்சிக்காக நடிகையின் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறார். ஆனால் அந்த நடிகை அதை நிஜ கல்யாணமாகவே பாவித்து அந்த தாலியை யாருக்கும் தெரியாமல் கிட்டத்தட்ட ஆறு மாத காலங்கள் வரை கழுத்திலே மறைத்து வைத்திருந்தாராம். அந்த அளவுக்கு அவருக்கு நடிகர் மீது காதல் இருந்திருக்கிறது.

Also read: சரக்கை ஊற்றி கொடுத்து சொத்தை ஆட்டைய போட்ட நடிகை.. ஆடம்பர வாழ்வுக்கு ஆசைப்பட்டு பாதியிலேயே முடிந்து போன வாழ்க்கை

ஆனால் நடிகருக்கு இந்த விஷயம் பற்றி எதுவும் தெரியாதாம். ஒரு நாள் நடிகையின் கழுத்தில் இருந்த தாலியை பார்த்த அவருடைய தங்கை உடனே தன் அம்மாவிடம் இது பற்றி கூறியிருக்கிறார். நடிகையின் காதலைப் பற்றி ஏற்கனவே தெரிந்த அவரின் அம்மா உடனடியாக தாலியை கழட்டும்படி கேட்டிருக்கிறார்.

ஆனால் அந்த நடிகையோ முடியவே முடியாது என்று மறுத்திருக்கிறார். அதற்கு அவருடைய அம்மா இது அனைத்தும் நிஜம் கிடையாது என்று அவருக்கு புரிய வைத்து அதன் பின் அந்த தாலியை கழட்டி இருக்கிறார். இருந்தாலும் அந்த நடிகை நடிகரின் மீது இருந்த காதலை மாற்றிக் கொள்ளவில்லை. ஆனாலும் அந்த நடிகையின் காதல் இறுதிவரை சினிமா காதலாகவே இருந்து விட்டது.

Also read: நடிகரின் டார்ச்சரால் நொந்து போன நடிகை.. பத்ரகாளியாக மாறிய 2வது மனைவி

Trending News