தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், அவரது இல்லத்தில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு அவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று மகேஷ்பாபுவின் தந்தையான பழம்பெரும் நடிகர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா மாரடைப்பால் உயிரிழந்தார்.
79 வயதாகும் நடிகர் கிருஷ்ணா, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்தார். அவரது இழப்பை அறிந்த திரைப்பிரபலங்கள் மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Also Read : பாலிவுட்டிலும் பெயரை கெடுத்து கொள்ளும் அட்லி.. முன்கூட்டியே விழித்துக் கொண்ட ஷாருக்கான்
ட்விட்டரில் உலகநாயகன் கமலஹாசன், பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிகர் கிருஷ்ணாவின் மறைவிற்கு இரங்கலையும், மகேஷ்பாபுவின் குடும்பத்தாருக்கு ஆறுதலும் தெரிவித்துள்ளனர். இதனிடையே மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி ஹைதராபாத்தில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
அதற்கு முன்பாகவே மகேஷ்பாபுவின் அண்ணனும், நடிகருமான ரமேஷ் பாபு இந்த வருடம் ஜனவரி 8ஆம் தேதி உடல்நலக்குறைவால் தனது 56 வயதிலேயே காலமானார். இவரது இழப்பில் இருந்து மீண்டு கொண்டிருந்த மகேஷ்பாபுவுக்கு அடுத்தடுத்து தாயார் மற்றும் தந்தையின் உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read : என்ன மீறி படத்தை ரிலீஸ் பண்ணிடுவியா.. விஜய்க்கு உதயநிதி போடும் ஸ்கெட்ச்
பொதுவாக ஒரு குடும்பத்தில் யாரேனும் உயிரிழந்து விட்டால் அடுத்ததாக நல்ல காரியங்கள் நடக்கும் என்று சொல்வார்கள், ஆனால் நடிகர் மகேஷ் பாபுவின் வாழ்க்கையில் தனது அண்ணன், தாயார், தந்தை என தொடர்ந்து இந்த வருடத்தில் மட்டும் மூன்று உறவுகளை இழந்து வாடி வருவது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் மகேஷ்பாபு இந்த ஆண்டு தெலுங்கில் நடித்த ஆச்சார்யா, சர்க்காரு வாரி பட்டா உள்ளிட்ட திரைப்படங்களில் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களும் பெரும் தோல்வியடைந்தன. மகேஷ் பாபுவிற்கு 2022ஆம் ஆண்டில் தனது சொந்த வாழ்க்கையிலும், நடிப்பு துறையிலும் பெரும் தோல்வி அடைந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : பல கோடி செலவில் மொக்க பாடலை வெளியிட்ட நாய் சேகர் படக்குழு.. வடிவேலு குரலில் வெளியான அப்பத்தா