திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தொழிலதிபருடன் லிவிங் ரிலேஷன்ஷிப், நடிகருடன் திருமணம்.. பிளான் போட்டு காய் நகர்த்திய குடும்ப குத்து விளக்கு

பார்த்த உடனே பிடித்துப் போகும் வசீகர முகமும், அழகும் நிறைந்தவர் தான் அந்த நடிகை. அதனாலேயே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிய தொடங்கியது. மார்க்கெட் இருக்கும்போதே சம்பாதித்து விட வேண்டும் என்று பிளான் போட்ட அந்த நடிகை திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து காசு பார்த்து வந்தார்.

அப்படி பிரபல நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த போதுதான் நடிகைக்கு அதன் உரிமையாளருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மிகவும் சாதாரணமாக பழகி வந்த நடிகையின் அழகில் சொக்கி விழுந்த அந்த தொழிலதிபர் நடிகைக்கு ஏகப்பட்ட விலைமதிப்புள்ள நகைகளை பரிசாக கொடுத்து இம்ப்ரஸ் செய்திருக்கிறார்.

Also read: அணில் கடித்த பழத்தை தேடி தேடி ருசிக்கும் நடிகர்.. அடுத்தடுத்து வலையில் சிக்கிய 3 நடிகைகள்

ஆரம்பத்தில் அதை ஏற்க மறுத்த நடிகை பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தொழிலதிபரின் வலையில் விழ ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் நடிகைக்கு இருந்த பெரும் பிரச்சனையை அந்த தொழிலதிபர் தீர்த்து வைக்கவே நடிகை அவரிடம் மொத்தமாக சரணடைந்திருக்கிறார். இப்படி ஆரம்பித்த அவர்களுடைய பழக்கம் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் வரை லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறது.

ஆனால் ஒரு கட்டத்தில் தொழிலதிபர் நடிகையிடம் அதிக கெடுபிடி காட்டியிருக்கிறார். அதாவது படங்களில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க கூடாது, பாய் ஃப்ரெண்ட் இருக்கக் கூடாது என்று ஓவராக தொந்தரவு செய்து இருக்கிறார். இந்த டார்ச்சரை தாங்க முடியாத நடிகை சங்காத்தமே வேண்டாம் என்று அவருக்கு பெரிய கும்பிடு போட்டு விலகி இருக்கிறார்.

அதன் பிறகு தன்னுடைய இமேஜை காப்பாற்றிக் கொள்ள மார்க்கெட் இல்லாத ஒரு நடிகரை அவர் திருமணம் செய்து கொண்டார். இப்படி பக்காவாக பிளான் போட்டு காய் நகர்த்திய அந்த நடிகை தற்போது குடும்பம், குழந்தை என்று வாழ்ந்து வருகிறார். இப்போதும் கூட சில தொழிலதிபர்கள் அந்த நடிகைக்கு வலை வீச தான் செய்கிறார்கள். ஆனால் நடிகை எந்த வலையிலும் சிக்காமல் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Also read: சாமி நடிகருக்கு கூரைய பிச்சிக்கிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. எல்லாம் 2வது மனைவியோட ராசி தான்

Trending News