சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

வில்லனாக நடிக்க ஹீரோ லெவலுக்கு சம்பளம் கேட்ட கெத்தான இயக்குனர்.. விஜய் சேதுபதி, பகத் பாசிலிக்கே டஃப் கொடுத்த ஸ்டைலிஷ் மேன்

சமீபத்தில் வெளியான ஒரு சில படங்களை வைத்துப் பார்த்தால் ஹீரோவாக நடிக்கும் நடிகர்கள் எல்லாம் வில்லன் நடிகராக அவதாரம் எடுக்கின்றனர். அவர்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அதற்கு ஒரு கணிசமான தொகையை கேட்கின்றனர்.

அப்படிதான் விக்ரம் படத்தில் உலக நாயகனுக்கு வில்லனாக நடித்த பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இருவரின் மார்க்கெட் எகிறி விட்டது, இதனால் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் சம்பளத்தை உயர்த்தி விட்டனர். குறிப்பாக இவர்கள் வில்லனாக நடிப்பதற்கு 20 கோடிக்கு மேல் சம்பளமாக கேட்கின்றனர்.

Also Read: பயத்தை காட்டிய தளபதி, லோகேஷ் காம்போ.. அடுத்தடுத்து வில்லனாக நடிக்க மறுக்கும் 4 டாப் நடிகர்கள்

இந்நிலையில்  விஜய் சேதுபதி, பகத் பாசிலிக்கே டஃப் கொடுக்கிறார் ஸ்டைலிஷ் மேன் ஒருவர். அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தை கேங்ஸ்டர் படமாக வில்லன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக உள்ளது.

இதில்  முக்கிய வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், இவருடன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் இணைந்து வில்லனாக நடிக்க உள்ளார். இவர்களுடன் விஷாலும் இணைவதாக தகவல்கள் வெளியானது.

Also Read: காதல் கல்யாணத்துக்காக பரிகாரம் செய்யும் விஷால்.. 45 வயது வரை திருமணம் தள்ளி போக இதுதான் காரணம்

தளபதி 67 படத்தில் பிரித்விராஜ் நடிப்பதாக இருந்தது. அவர் விலகி நிலையில் அவருக்கு பதில் தான் விஷால் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படம் மட்டுமல்ல இன்னும் நிறைய படங்களில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாக இருக்கும் விஷால், கதாநாயகனாக நடித்ததை விட வில்லனாக நடிப்பதற்கு அதிக சம்பளம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவருடன் இப்போது கௌதம் வாசுதேவ் மேனனும் வில்லனாக நடிப்பதற்கு மட்டும் 30 கோடியை சம்பளமாக கேட்டிருக்கிறார். ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் ஸ்டைலிஷ் மேன் ஆக தமிழ் ரசிகர்களுக்கு தோன்றிய இவர், இப்போது வில்லனாக தன்னுடைய கொடூர முகத்தை காட்டுவதற்கு ஹீரோ லெவலுக்கு சம்பளம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read: எலியையும், பூனையையும் ஒரே படத்தில் கோர்த்துவிட்ட லோகேஷ்.. உச்சகட்ட பயத்தில் தளபதி 67 படக்குழு

- Advertisement -spot_img

Trending News