ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தேவாவுக்கு முன்னரே கானா பாடலுக்கு விதையாக இருந்த ஜாம்பவான்.. மறக்க முடியாத “ஏ புள்ள கருப்பாயி” பாடல்

தமிழ் சினிமாவில் எத்தனையோ இசைகள், பாடல்கள் இருந்தாலும் கானா பாடலுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். கானா பாடலை பாடுவதற்கும், பாடல் வரிகளை எழுதுவதற்கும் தனித்திறமை வேண்டும். அப்படிப்பட்ட கானா பாடல் அடித்தட்டு மக்கள் பாடும் பாடலாகவே அமைந்திருந்தது.

ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறிந்து சினிமா பாடல்களில் கானா பாடல்களை இசையமைத்து, உலகம் முழுக்க இருக்கும் பல ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தவர் தான் தேனிசை தென்றல் தேவா. இவரது இசைக்கு என இன்றுவரை தனி ரசிகர்கள் உண்டு. அதிலும் அவரது குரலில் பாடும் கானா பாடல்களுக்கு ரசிகர்களிடம் மவுசு அதிகம் எனலாம்.

Also Read : தேவாவின் வாழ்க்கையை மாற்றிய பிரபலம்.. சூப்பர்ஸ்டாருக்கு செய்த தரமான சம்பவம்

இதனிடையே இன்று வரை நம்மில் பலரும் கானா பாடல்களை முதன் முதலில் திரைக்கு கொண்டு வந்தவர் தேனிசை தென்றல் தேவா என்று தான் நம்பியுள்ளோம். ஆனால் இவருக்கு முன்னரே பிரபல இசையமைப்பாளர் ஒருவர் கானா பாடலை சினிமாவில் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளார்..

1987ஆம் ஆண்டு நடிகர் ராம்கி, பிரபு உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சின்ன பூவே மெல்ல பேசு திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்தார். அத்திரைப்படத்தில் ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயி என்ற கானா பாடலை நம்மில் பலரும் கேட்டிருப்போம்.

Also Read : நான் இன்றுவரை கடனில் தான் வாழ்கிறேன்.. குமுறிய நடிகர் ஜெய்

சூப்பர்ஹிட் பாடலான இந்த பாடல் தான் முதன் முதலில் சினிமாவில் கேட்கப்பட்ட முதல் கானா பாடலாகும். இதற்கு பின்பு தான் தேவா அவர்கள் காண பாடல்களை தான் இசையமைக்கும் அத்தனை படங்களிலும் இசையமைக்க ஆரம்பித்தார். இதற்கு விதையாக இருந்த எஸ்.ஏ.ராஜ்குமார் காலப்போக்கில் மெலடி பாடல்களை இசையமைத்தார்.

ஆனால் இசையமைப்பாளர் தேவாவின் காண பாடல்கள் கல்யாணம், சடங்கு, காதுகுத்து, திருவிழா என பல குடும்ப விழாக்காலக்களில் இன்று வரை ஒரு அங்கமாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இது அனைத்திற்கும் விதையாக இருந்தவர் எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : பாட்ஷா படத்தை குறை சொன்ன KS ரவிக்குமார்.. ரஜினி கொடுத்த மாஸ் பதில்

Trending News