500 கோடி வசூலுக்கு தயாராகும் 3 படங்கள்.. பொன்னியின் செல்வன் போல் உச்சகட்ட எதிர்பார்ப்பில் கோலிவுட்

தமிழ் சினிமாவில் மற்ற மொழி படங்களைப் போல இங்கும் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடும் விதமான படங்கள் எடுத்து வரப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தை உலகம் முழுவதும் கொண்டாடினார்கள்.

இந்த படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பது மணிரத்தினத்தின் பல வருட கனவு. அது இப்போது நினைவாகி உள்ளது. இப்படம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் நல்ல வசூல் செய்திருந்தது.

இப்போது 500 கோடி வசூலை பொன்னியின் செல்வன் படம் எட்டி உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக 500 கோடி வசூலுக்கு தயாராகி வரும் படங்களின் பட்டியலை இப்போது பார்க்கலாம். அவ்வாறு கோலிவுட்ல ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் அந்த மூன்று படங்களின் விவரம்.

பொன்னியின் செல்வன் 2 : மணிரத்தினம் பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை ஒன்றாகவே எடுத்த முடித்துள்ளார். முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

தளபதி 67 : மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து மீண்டும் லோகேஷ், விஜய் கூட்டணியில் உருவாக உள்ள படம் தளபதி 67. இந்த படத்தில் கிட்டத்தட்ட 6 வில்லன்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்தப் படம் 500 கோடி வசூல் செய்வது கன்ஃபார்ம் என்று ரசிகர்கள் ஆர்ப்பரிக்கின்றனர்.

விக்ரம் 2 : கமலின் படங்களில் அதிக வசூல் செய்து இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்த படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் மீண்டும் இதே கூட்டணியில் விக்ரம் 2 படம் உருவாக உள்ளது. இந்தப் படம் விக்ரம் படத்தின் வசூலை முறியடிக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.