அஜித்துடன் அடுத்த படம்.. லோகேஷ் கொடுத்த அல்டிமேட் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த விக்ரம் திரைப்படம் உலக அளவில் பல சாதனைகளை நடத்தியது. விக்ரம் திரைப்படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ் உலக அளவில் கவனம் பெற்ற இயக்குனராக மாறி இருக்கிறார்.

இதனாலேயே அவருடைய அடுத்த திரைப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக விஜய்யை வைத்து தளபதி 67 திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.

மாஸ்டர், அதன் பிறகு தளபதி 67 என விஜயை மட்டும் வரிசையாக இயக்கிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் எப்போது தல அஜித்தின் படத்தை இயக்குவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது அல்டிமேட் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

அதாவது அஜித்துடன் இணைவீர்களா? என்ற கேள்வி லோகேஷ் கனகராஜிடம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அஜித்துடன் இணைய எனக்கும் ஆசை தான். அப்படி அவருடன் கூட்டணி அமைந்தால் நிச்சயம் அந்த படம் தீனா மாதிரி தான் இருக்கும் என்று லோகேஷ் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இவ்வாறு லோகேஷ் அஜித் கூட்டணியில் அடுத்த படம் உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் அஜித்தும் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் துணிவு படத்தை முடித்துவிட்டு விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு லோகேஷ்க்கு அஜித் வாய்ப்பு தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதை ரசிகர்களும் விரும்புவதால் நிச்சயம் அஜித் இதைப் பற்றி யோசித்து, லோகேஷின் படத்தில் நடிக்க கமிட் ஆகுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.