திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹீரோக்களின் சப்போர்ட் இல்லாமல் வசூலை வாரிக் குவிக்கும் 7 ஹீரோயின்கள்

ஒரு காலத்தில் இந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்கள் பாடல் காட்சிகளுக்கும், காதல் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் இன்றைய நிலை அப்படியே மாறியிருக்கிறது. ஹீரோக்களுக்கு சமமாக, ஹீரோயின்கள் மட்டுமே தனி கதாநாயகியாக நடிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதோடு, அவர்களுக்கு சமமாக வசூலும் கல்லா கட்டுகிறது.

சமந்தா: நடிகை சமந்தாவுக்கு சமீபத்தில் ரிலீஸ் ஆன யசோதா திரைப்படம் ஒரு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது. மேலும் இந்த படம் சமந்தாவுக்கு வெற்றிப்படமாக அமைந்ததோடு வசூலிலும் வெற்றிநடை போட்டு கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சமந்தா ஹீரோக்களுக்கு இணையாக சண்டை காட்சிகளில் நடித்திருப்பார்.

Also Read: பெண்களை மையப்படுத்தி எடுக்கபட்ட 5 படங்கள்.. திருமணத்திற்கு பின்னும் சிங்க பெண்ணாக லேடி சூப்பர் ஸ்டார்

அனுஷ்கா: அனுஷ்கா தென்னிந்திய சினிமாவின் ராணி என்றே சொல்லலாம். இவர் நடித்த அருந்ததி திரைப்படமே இன்று வரை அவருக்கு பெயர் வாங்கி கொடுத்து கொண்டிருக்கிறது. இப்போது அனுஷ்காவுக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், ரசிகர்களிடையே இன்னுமே அவருக்கு வரவேற்பு இருக்கிறது.

நயன்தாரா: எத்தனை கேலி, கிண்டல்கள் செய்தாலும் நயன்தாரா தான் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்று ஹீரோக்கள் இல்லாமல் பலர் தனி கதாநாயகியாக படங்கள் பண்ண இவர்தான் ஒரு முன்னோடி என்று சொல்லலாம்.

சாய் பல்லவி: எந்தவித மேக்கப் இல்லாத முகம், காட்டன் புடவை என தென்னிந்திய சினிமா ரசிகர்களை முதல் படத்திலேயே கட்டி போட்டவர் சாய் பல்லவி. எத்தனை டாப் ஹீரோயின்கள் இருந்தாலும், சாய் பல்லவிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

Also Read: நயன்தாரா இடத்தை கைபற்றும் ஹீரோயின்.. 2 நடிகைகளையும் பின்னுக்கு தள்ளிய மூன்றாவது நாயகி!

கீர்த்தி சுரேஷ்: வழக்கமான கதாநாயகிகள் போல் பாட்டு, காதல் காட்சி என திரையில் தோன்றிக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷின் வாழ்க்கையை மாற்றியது மகாநடி திரைப்படம் தான். இந்த படம் இவருக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது.

கங்கனா ரனாவத்: இந்திய சினிமாவின் தைரியமான நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத். மற்ற ஹீரோயின்கள் போல இல்லாமல் சமூகத்திற்காகவும் குரல் கொடுக்கும் நாயகி. இவர் மறைந்த முதலைமைச்சர் ஜெயலலிதாவின் பையோபிக்கில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

டாப்ஸி பன்னு: டாப்ஸி ஹீரோக்கள் கூட ஜோடி போட்டு நடித்தாலும் தனக்கென ஒரு அடையாளத்தை வளர்த்து கொண்டவர். இந்தி சினிமாவில் இவருக்கென்று ரசிகர்கள் கூட்டம் உண்டு. இப்போது நிறைய வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.

Also Read: நயன்தாரா போல் நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.. மேடையில் அதிரடியாக பேசிய நடிகை

Trending News