முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர்தான் அந்த நடிகை. சிரிப்புக்கு பெயர் போன அந்த நடிகை தற்போது திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார்.
அது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் சில நிகழ்ச்சிகளிலும் இவர் கலக்கி வருகிறார். இப்படி பரபரப்பாக இருக்கும் நடிகையைப் பற்றி சமீபத்தில் வெளிவந்த ஒரு செய்தி அனைவரையும் அதிர்ச்சியாக்கியது. அதாவது நடிகை காதலித்து திருமணம் செய்து கொண்ட தன் காதல் கணவரை பிரியப் போகிறார் என்று ஒரு செய்தி கடந்த சில நாட்களாகவே ஊடகங்களை கலக்கிக் கொண்டிருக்கிறது.
Also read: ஆடை கிழிந்து, தலை முடியை பிடித்து நடந்த ஆக்ரோஷமான சண்டை.. நீயா நானா என போட்டி போட்ட நடிகைகள்
திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் இப்படி ஒரு முடிவை நடிகை ஏன் எடுத்தார் என்று அனைவரும் குழம்பிப்போன நிலையில் அது வெறும் வதந்தி தான் என்று தெரியவந்தது. இப்படி ஒரு விஷயம் நடிகைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோ என்னவோ திடீரென அவர் தன் கணவருடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனாலும் நடிகைக்கு இப்படி ஒரு வதந்தி பரவியது மிகவும் வருத்தம் தான். இந்நிலையில் இந்த பரபரப்பு செய்திக்கு பிரபல சேனல் தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் அந்த சேனல் நடிகையிடம் ஒரு பேட்டி எடுக்க அணுகி இருக்கிறார்கள். அதற்கு ஒப்புக்கொண்ட நடிகை சம்பளமாக சில பல லட்சங்களை கேட்டு இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சேனல் நிர்வாகம் சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்டிருக்கிறது. ஆனால் நடிகை முடியவே முடியாது என்று மறுத்திருக்கிறார். அதனால் கடுப்பான அந்த சேனல் தான் நடிகையைப் பற்றி இப்படி ஒரு வதந்தியை பரப்பி இருக்கிறது. நடிகையை பழிவாங்க இப்படி ஒரு வேலையை பார்த்த சேனல் பற்றி தான் தற்போது பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.
Also read: ஹீரோயினை நைசாக தள்ளிக் கொண்டு போன ஹீரோ.. ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென மிஸ் ஆன ஜோடி