வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கெட்ட சவகாசம், குடி மொத்த வாழ்க்கையும் இழந்த வாரிசு நடிகர்.. 365 நாள் வெற்றி விழா கொண்டாடிய அப்பாவுக்கு இந்த நிலையா?

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், அஜித், பிரபு, சத்யராஜ், உள்ளிட்ட மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களை இயக்கி அவர்களின் கேரியருக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் அந்த சூப்பர் ஹிட் இயக்குனர். தற்போது ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக பேய் திரைபடத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது அவர் தான் இயக்கியும் வருகிறார். 365 நாள் வெற்றி விழா கொண்டாடிய அந்த இயக்குனருக்கு குடிப்பழக்கத்தால் அடிமையான மகன் நடிகராக உள்ளார்.

அவர் தான் இயக்குனர் பி.வாசுவின் மகனான நடிகர் சக்தி தொட்டால் பூ மலரும் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அத்திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அவர் அடுத்தடுத்து நடித்த திரைப்படங்கள் ஹிட்டாகாததால் அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை.

Also Read: ரஜினிக்கே மறுவாழ்வு கொடுத்த இயக்குனர்.. மறக்கமுடியாத பி.வாசு-வின் 5 வெற்றி படங்கள்

என்னதான் பி.வாசு பெரிய இயக்குனராக இருந்தாலும் தன் மகனுக்கு ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க முடியவில்லை. பின்னர் சக்தி திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இதனிடையே மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சக்தி சர்ச்சைக்குரிய பிரபலமாக வலம் வந்தார்.

அந்த நிகழ்ச்சியில் நடிகையும், நடன கலைஞருமான காயத்ரி ரகுராமுடன் சேர்ந்து நடிகை ஓவியாவை வாயில் வந்ததையெல்லாம் பேசி கடைசியில் தனக்கு கிடைத்த வாய்ப்பையும் சக்தி, அவரே கெடுத்துக் கொண்டார். இருந்தாலும் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த சிவலிங்கா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

Also Read: சந்திரமுகி படத்தில் கறாராக பேசிய வடிவேலு.. வழியின்றி ஒப்புக்கொண்ட பி.வாசு

அத்திரைப்படம் அவருக்கு கைகொடுக்கும் என நினைத்திருந்த நிலையில், படம் தோல்வியடைந்ததால் அதோடு நடிகர் சக்தி திரைப்படங்களில் நடிக்காமல் உள்ளார். இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய சக்தி, தான் சேரக்கூடாத நண்பர்களோடு சேர்ந்து குடிபழக்கம் தான் தனது வாழ்க்கை என வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நடிகர் சக்தியின் பர்சனல் வாழ்க்கையும் இவருக்கு இனிதாக அமையாமலும், பட வாய்ப்புகள் சரியாக கிடைக்கத்தால் கடும் மன வேதனையில் மது பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும் கூறினார். இதனால் தனக்கு வந்த அனைத்து சினிமா வாய்ப்புகளையும் இழந்துவிட்டதாக வருத்தத்துடன் பேசினார். இருந்தாலும், தன்னுடைய குடிப்பழக்கத்தில் இருந்து தற்போது மீண்டு வருவதாகவும் கூடிய விரைவில் படங்களில் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்..

Also Read: ரஜினியே வாடா போடா என அழைத்த நடிகர்.. டென்ஷனான பி.வாசு, சூப்பர் ஸ்டார் என்ன செய்தார் தெரியுமா.?

Trending News