திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஞாபகமே இல்லாத நடிகர் கொடுத்த 5 வெற்றிப்படம்.. பல பேரிடம் ஏமாந்து வாழ்க்கையை தொலைத்த ஹீரோ

சில ஹீரோக்கள் குறைந்த படங்களில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். அப்படி ஆரம்பத்தில் நிறைய ஹிட் படங்களை கொடுத்த ஹீரோ பலரிடம் ஏமாந்து வாழ்க்கையை தொலைத்து உள்ளார். அதுமட்டுமின்றி சிலரிடம் காசு கொடுத்தும் அந்த நடிகர் ஏமாந்து உள்ளார்.

அவர் வேறு யாருமில்லை சின்னத்தாயி படத்தின் மூலம் அறிமுகமான விக்னேஷ் தான். இவருக்கு பல திறமைகள் இருந்தும் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தோற்றுப் போய் உள்ளார். ஆனாலும் இவர் கொடுத்த 5 ஹிட் படங்களை பார்க்கலாம்.

Also Read : வில்லியாக ரஜினியை உரசிப் பார்த்த 5 நடிகைகள்.. சண்டி ராணியாக சீறிய விஜயசாந்தி

சின்னத்தாயி : விக்னேஷின் முதல் படமான சின்னத்தாயி படத்தில் பொன்ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நகரத்தில் படிப்பை முடித்துவிட்டு கிராமத்திற்கு வரும் இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

கிழக்குச் சீமையிலே : பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படத்தில் சீனு என்ற கதாபாத்திரத்தில் விக்னேஷ் நடித்திருந்தார். தனது அத்தை மகளை மாமாவின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொள்ள துடிக்கும் ஒருவராக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.

ராமன் அப்துல்லா : பாலுமகேந்திரா இயக்கத்தில் விக்னேஷ் மற்றும் ஈஸ்வரி ராவ் நடிப்பில் வெளியான திரைப்படம் ராமன் அப்துல்லா. இந்த படத்தில் ராமன் என்ற கதாபாத்திரத்தில் விக்னேஷ் நடித்திருந்தார். 1997 இல் வெளியான இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

Also Read : ரஜினி, கவுண்டமணி கூட்டணியில் செம்ம லூட்டி அடித்த 6 படங்கள்.. பத்த வச்சுட்டியே பரட்ட!

பொங்கலோ பொங்கல் : வி சேகர் இயக்கத்தில் விக்னேஷ், விவேக், வடிவேலு மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் பொங்கலோ பொங்கல். இந்த படத்தில் சுய முயற்சியால் சொந்த தொழில் செய்து முன்னேறுவதை நகைச்சுவையாக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் சுப்பிரமணி என்ற கதாபாத்திரத்தில் விக்னேஷ் நடித்திருந்தார்.

ஆச்சாரியா : ரவி இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு விக்னேஷ் நாசர் மற்றும் பல நடிப்பில் வெளியான திரைப்படம் ஆச்சார்யா. இப்படத்தில் சாமி என்ற கதாபாத்திரத்தில் விக்னேஷ் நடித்திருந்தார். இந்த படத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Also Read : 10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த 5 ஹீரோயின்கள்.. இன்றுவரை அடிச்சிக்கவே முடியாத ஐஸ்வர்யா ராய்

Trending News