பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு பட்ஜெட்டும் அதிகமாக இருக்கும் , பில்டப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் ஒரு சில படங்கள் எந்த விளம்பர ஜாலங்களும் இல்லாமல் சத்தமே இல்லாமல் ரிலீஸ் ஆகி கொஞ்ச நாளிலேயே ஒட்டுமொத்த சினிமா உலகினைரையும் திரும்பி பார்க்க வைத்துவிடும். ஒரு படம் பெரிய ஹிட் ஆக பெரிய ஹீரோ, அதிக பட்ஜெட் இருந்தால் மட்டும் பத்தாது. நல்ல கண்டெண்ட் வேண்டும். கண்டெண்ட் மட்டும் அமைந்துவிட்டால் புதுமுகங்களை வைத்து எடுத்தாலும் படம் ஹிட் அடித்துவிடும்.
மதயானை கூட்டம்: நடிகர் கதிருக்கு மதயானை கூட்டம் தான் முதல் படம். ஆனால் இந்த முதல் படமே அவருக்கு ஹிட்டாக அமைந்தது. ஒரு கிராமத்தில் நடக்கும் அன்றாட வாழ்வியலை எதார்த்ததுடன் எடுத்து சொன்னதால் இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இறப்பிற்கு பின்னால் நடக்கும் சடங்குகளையும், அதில் உள்ள கௌரவத்தையும் பற்றி எடுத்து சொன்ன படம் இது.
Also Read: கோமாளி படத்தின் முதல் சாய்ஸ் ஜெயம் ரவி இல்ல.. வெற்றிக்குப்பின் பிரதீப் வெளியிட்ட ரகசியம்
பரியேறும் பெருமாள்: இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு இது முதல் படம். முதல் படம் என்ற சாயல் எந்த இடத்திலும் தெரியாத அளவுக்கு படத்தை இயக்கியிருந்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு என படத்தில் நடித்த அத்தனை பேரும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தின் இன்னொரு பக்கத்தை இந்த படம் காட்சிப்படுத்தியிருந்தது.
அருவி: டாப் ஹீரோயின்களே தனிக் கதாநாயகியாக நடிக்க தடுமாறும் சூழ்நிலையில் அதிதி பாலன் என்னும் அறிமுக நாயகி ஹீரோயினாக நடித்து, வேறு எந்த பெரிய நடிகர்களும் இல்லாமல் உருவான அருவி திரைப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படமானது. ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த பெண் சமூகத்தில் சந்திக்கும் இன்னல்களை இந்த படம் காட்சிப்படுத்தியிருந்தது.
Also Read: புகழ் போதையில் நன்றி மறந்து சிவகார்த்திகேயன்.. தம்பி பிரதீப் பார்த்து கத்துக்கோங்க ப்ரோ!
மண்டேலா: காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்த திரைப்படம் மண்டேலா. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் எழுதி, இயக்கி இருந்தார். மண்டேலா திரைப்படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவான திரைப்படம் ஆகும். இன்றைய அரசியல் சூழ்நிலையை நையாண்டியாக அதே நேரம் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்படம்.
லவ் டுடே: கோமாளி என்னும் ஹிட் படத்தின் இயக்குனர் பிரதீப் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் லவ் டுடே. இந்த படம் யாருமே எதிர்பார்க்காத வகையில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து கொண்டிருக்கிறது. ரிலீஸ் ஆன மூன்றே வாரங்களில் 50 கோடி வசூலை தாண்டிவிட்டது. இன்றைய நவீன காதலை அப்படியே எதார்த்தமாக காட்சியாக்கி மிகப்பெரிய வெற்றியை தொட்டுவிட்டார் பிரதீப் ரங்கநாதன்.
Also Read: கெஞ்சி பட வாய்ப்பு கேட்ட வாரிசு நடிகர்.. ஒரே படத்தின் வெற்றியால் எகிறிய பிரதீப் மார்க்கெட்