செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பொன்னியின் செல்வன் நடிகையுடன் ரகசிய தொடர்பில் நாக சைதன்யா.. போட்டோவுடன் மாட்டிக்கொண்ட பரிதாபம்

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். மிகக் குறுகிய காலத்திலேயே இவர்களது திருமண வாழ்க்கையில் சிறிது ஏற்பட்டது. ஆகையால் இருவரும் மனமொத்த விவாகரத்து பெற்ற பிரிந்து விட்டனர்.

சாதாரணமாக ஒரு நடிகைக்கு திருமணம் ஆனாலே அவரது மார்க்கெட் இறங்கி விடும். விவாகரத்திற்கு பிறகும் சமந்தா சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். சொல்லப்போனால் இப்போதுதான் அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது.

Also Read : திரும்பத் திரும்ப அடிவாங்கும் சமந்தா.. இவருக்கு மட்டும் புதுசு புதுசா எங்கிருந்து பிரச்சனை வருதோ

இந்நிலையில் சமந்தாவை பிரிந்த ஒரு வருடத்திலேய நாக சைதன்யாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியானது. ஆனால் இது குறித்த உறுதிப்பட தகவல் வெளியாகாத நிலையில் பொன்னியின் செல்வன் பட நடிகை உடன் நாகச் சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக இணையத்தில் ஒரு செய்தி கசிந்துள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சோபிதா. இவருடன் தான் தற்போது நாக சைதன்யா டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக உள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Also Read : நடிகை படுத்தும் பாடு, பொன்னியின் செல்வன் 2 நடிக்க மறுக்கும் ஹீரோக்கள்.. ஆளை மாற்றும் மணிரத்தினம்

ஆனால் இவர்கள் இருவருமே தனியாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை யாரோ இதுபோன்ற இணைத்து வெளியிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரையும் இணைத்து அடிக்கடி செய்திகள் இணையத்தில் வெளியான போதும் இவர்கள் எதுவும் சொல்லாதது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இப்போது இந்த புகைப்படத்தை வைத்த இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வதாக ரசிகர்கள் உறுதியை செய்து விட்டார்கள். ஆகையால் நாகச் சைதன்யா மற்றும் சோபிதா தரப்பில் இருந்து இது குறித்து செய்தி வெளியானால் மட்டுமே இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

nagachaitanya-sobhita

Also Read : விவாகரத்தை மறந்து காதல் மனைவியை தேடி சென்ற நாக சைதன்யா.. விரைவில் வரப்போகும் குட் நியூஸ்

Trending News