வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

நாளுக்கு நாள் மோசமாகும் உடல்நிலை.. மார்க்கெட் பயத்தில் சீக்ரெட் டிரீட்மெண்டில் இருக்கும் நடிகை

நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்தான் அந்த நடிகை. அழகும், உச்சகட்ட கவர்ச்சியும் அவரை ஓவர் நைட்டில் புகழ்பெற வைத்தது. எந்த அளவுக்கு அவரைச் சுற்றி புகழ் வெளிச்சம் இருந்ததோ அதே அளவுக்கு அவரைப் பற்றிய சர்ச்சைகளும், வதந்திகளும் எக்கச்சக்கமாக இருந்தது.

ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத நடிகை தன்னுடைய போக்கில் பலரும் நடிக்க தயங்கும் கதைகளில் தைரியமாக நடித்து வந்தார். இதற்கிடையில் நடிகையின் திருமண வாழ்க்கையும் குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்தது. சுதந்திரமாக லைஃபை என்ஜாய் செய்து வந்த நடிகைக்கு கணவர் தரப்பிலிருந்து ஏகப்பட்ட கண்டிஷன்கள் வரவே அவர் நீயும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் என்று உதறி தள்ளினார்.

Also read: நடிக்க வருவதற்கு முன்பே செய்த அட்ஜஸ்ட்மென்ட்.. அடுத்தடுத்து வாய்ப்புகளை குவித்த ஃபேமிலி கேர்ள்

அதை தொடர்ந்து எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடித்து வந்த நடிகை தற்போது கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைப் பற்றி கேள்விப்பட்ட பலரும் அவருக்கு ஆறுதல் சொல்லி வந்த நிலையில் இதையே பிரமோஷன் ஆக செய்து சமீபத்தில் அவர் நடித்த படத்தை கூட வெற்றி பெற வைத்தார்.

இப்படி எல்லாத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வந்த நடிகை தற்போது உடல்நிலை மோசமாக மாறிய காரணத்தால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சிகிச்சை பெற்று வருகிறாராம். எழுந்து நிற்க கூட முடியாத அளவுக்கு நாளுக்கு நாள் அவருடைய உடல்நிலை மோசமாக மாறவே பயந்து போன நடிகை தற்போது தன் உடல் நலத்தில் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார்.

இது குறித்து மீடியாவில் செய்திகள் பரவுவதை பார்த்து எங்கே தன்னுடைய மார்க்கெட்டு போய்விடுமோ என்று பயந்த நடிகை நான் நன்றாக தான் இருக்கிறேன் என்று கூறி வருகிறார். இருப்பினும் நடிகையின் உடல்நிலை தேறி வருவதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் எப்படியும் தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்தே தீருவேன் என்று நடிகை விரைவில் குணமடைய அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகிறாராம்.

Also read: வெள்ளை தோல் நடிகைகளை விரும்பாத சுமார் மூஞ்சி குமார்.. திருமணமாகியும் அரவணைப்பில் இருக்கும் 2 நடிகைகள்

Trending News