சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

மொத்தமாக எம்ஜிஆர் நடித்த இரட்டைவேட படங்கள்.. டபுள் ஆக்ட் படத்தால் சிவாஜியை சரித்த புரட்சித்தலைவர்

சினிமா உலகில் எம்ஜிஆர், சிவாஜிக்கு இணையான நடிகரை தற்போது வரை யாரும் கண்டதில்லை. அந்த காலத்தில் இந்த இரு நடிகர்கள் இடையிலும் ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்தது. இவர்கள் இருவரும் மாறி மாறி ஹிட் படங்களை கொடுத்து வந்தனர்.

அந்தச் சமயத்தில் சிவாஜியின் மார்க்கெட் எம்ஜிஆரை விட உயர்ந்தது. ஆகையால் சிவாஜி படங்கள் மீது ரசிகர்கள் அதிகமாக ஈர்க்கப்பட்டனர். இதனால் சுதாகரித்துக் கொண்ட எம்ஜிஆர் தான் முதன் முதலாக இயக்கிய படம் மூலம் மக்களை தன் பக்கம் திரும்ப கொண்டு வந்து விட்டார்.

Also Read : என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய எம்ஜிஆர்.. கை கொடுத்து காப்பாற்றிய பாக்யராஜ்

அதாவது எம்ஜிஆர் முதல் இயக்கிய படம் நாடோடி மன்னன். இந்த படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடித்து அசத்து இருந்தார். இந்த படத்தின் மூலம் தான் விட்ட ரசிகர்களை மீண்டும் எம்ஜிஆர் பிடித்து விட்டார். இதனால் அடுத்தடுத்து இரட்டை வேட படங்களில் நடிப்பதில் ஆர்வம் செலுத்தி வந்தார்.

அந்த வகையில் எம்ஜிஆர் தன்னுடைய திரை வாழ்க்கையில் கிட்டத்தட்ட 17 படங்கள் இரட்டை வேட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் ராஜா தேசிங்கு, அடிமைப்பெண், நாளை நமதே, இன்று நேற்று நாளை, குடியிருந்த கோயில் போன்ற படங்கள் அடங்கும்.

Also Read : எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ஒரே ஒரு மலையாள படம்.. இசைக் கடவுளை உருவாக்கிய முதல் படம்

அதன் பின்பு சிவாஜியை காட்டிலும் தனக்கான ரசிகர்களை எம்ஜிஆர் அதிகப்படுத்தி கொண்டார். அவருடைய படங்கள் அடித்தட்டு மக்களையும் கவரும் விதமாக இருப்பதால் பெரும்பாலானோர் இவரது படம் மற்றும் பாடல்களுக்கு அடிமையாக இருந்தனர்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சராகவும் எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்து வந்தார். இன்று வரை சிறந்த நடிகர் மற்றும் சிறந்த அரசியல்வாதியாக பார்க்கப்படுபவர் எம்ஜிஆர் தான். அவர் மறைந்தாலும் அவரது படங்கள் மூலம் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Also Read : ஜெயலலிதாவை சுத்தி சுத்தி வந்த நடிகர்.. துப்பாக்கியை காட்டி மிரட்டிய எம்ஜிஆர் பின் கலைஞரிடம் தஞ்சம்

Trending News