ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வெளியானது டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்.. கதறி அழும் பாரதி

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியல் பத்து வருடங்களுக்கு மேல் மனைவி மற்றும் குழந்தையை பிரித்து இருக்கும் பாரதி, அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை புரிந்து கொள்ளும் தருணம் வந்திருக்கிறது. ஏனென்றால் இப்போதுதான் பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற ஞானோதயம் வந்திருக்கிறது.

இதற்காக டெல்லி செல்லும் பாரதி மருத்துவரிடம் அந்த ரிப்போர்ட்டை வாங்குகிறார். அதில் 100% ஹேமா மற்றும் லட்சுமி இருவரின் டிஎன்ஏ பாரதியுடன் மேட்ச் ஆகியுள்ளது. இதை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்ட பாரதி அதிர்ச்சியில் உறைகிறார்.

அந்த இடத்திலேயே நிலை குலைந்து உட்கார்ந்து அழுது புலம்பும் பாரதி, கண்ணம்மாவை இவ்வளவு நாள் சித்திரவதை செய்ததை நினைத்து வருந்துகிறார். அது மட்டும் அல்ல ஹேமா, லட்சுமி இருவரும் பிரிந்து இருந்ததற்கும், கண்ணம்மாவின் வாழ்க்கையை வீணடித்ததையும் நினைத்து கதறி அழுகிறார்.

Also Read: ஆலியா மானசா மட்டுமல்ல சூப்பர் ஹிட் இயக்குனரை வளைத்து போட்ட சன் டிவி.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

இதன்பின் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாரதியின் மனம் துடி துடிக்கிறது. மறுபுறம் வெண்பா, பாரதியையும் கண்ணம்மாவையும் மறுபடியும் சித்திரவதை செய்ய வேண்டும் என ஹேமாவை ஆள் வைத்து கடத்துகிறார். இதனால் கண்டெய்னரில் மாட்டிக்கொண்ட ஹேமா, கண்ணம்மாவிற்கு போன் செய்ய முயற்சிக்கிறார்.

ஆனால் சிக்னல் இல்லாததால் கண்ணம்மாவை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அதன் பின் ஹேமா மெசேஜ் மூலம், தான் இருக்கும் இடத்தின் லைவ் லொகேஷனை ஷேர் செய்கிறார். இதைப் பார்த்ததும் கண்ணம்மா இது நிச்சயம் ஹேமா தான் அனுப்பியிருப்பார் என அவரைக் காப்பாற்ற பதறி ஓடுகிறார்.

Also Read: ரட்சிதாவை சைட் அடித்ததற்கு இத்தனை கோடியா?. ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸில் வாங்கிய சம்பளம்

கண்ணம்மாவுடன் அகிலன் மற்றும் சௌந்தர்யா ஆகியோரும் ஹேமாவை இணைந்து தேடுகின்றனர். ஆனால் கண்ணம்மா ஹேமாவை கடைசியில் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும். இவ்வளவு நாள் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் எப்போது வரும் என இழுத்தடித்துக் கொண்ட பாரதிகண்ணம்மா சீரியலில், அந்த ரிசல்ட் வந்த பிறகு ஹேமா தொலைந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்பின் விரைவில் பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாம் பாகம் துவங்க உள்ளனர். இதில் தொலைந்து போன ஹேமா ஆட்டோ ஓட்டுனராகவும் பாரதியிடம் வளரும் லட்சுமி டாக்டராகவும் மாறுகின்றனர். இவ்வாறு இவர்கள் இருப்பதை வைத்து தான் இரண்டாம் பாகத்தின் கதை விறுவிறுப்புடன் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

Also Read: தேரை இழுத்து தெருவுல விட்ட மாமியார்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

Trending News