ரீல் ஹீரோயினை நிஜ ஜோடியாக்கிய பிரபாஸ்.. 43 வயதில் நடிகையுடன் ஏற்பட்ட முத்துன காதல்

தெலுங்கு திரை உலகில் பிரபல நடிகராக இருந்த பிரபாஸ் பாகுபலி என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் உலக அளவில் கவனம் பெற்றார். அதைத்தொடர்ந்து வெளியான அந்த படத்தின் இரண்டாம் பாகமும் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே பிரம்மாண்ட பட்ஜெட் படங்களாக தான் இருந்தது.

சமீபத்தில் இவன் நடிப்பில் வெளிவந்த ராதே ஷ்யாம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில் தற்போது அவர் ஆதி புருஷ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த திரைப்படம் அனிமேஷன் முறையில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

Also read: போஸ்டருடன் வெளியானது ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி.. பிரபாஸ் பிறந்தநாளுக்கு கிடைத்த டபுள் ட்ரீட்

கிட்டத்தட்ட 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த திரைப்படம் 1500 கோடி வரை வசூலிக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் 43 வயதாகும் பிரபாஸ் தற்போது சக நடிகை ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். பல வருடங்களாக இவர் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் பாகுபலியில் இவருக்கு ஜோடியாக நடித்த நடிகை அனுஷ்காவுடன் இவர் காதலில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இது பற்றி பிரபாஸ் எந்த விதமான விளக்கமும் அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் பிரபாஸ் நடிகை கீர்த்தி சனோனை காதலித்து வரும் செய்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

Also read: படமே இன்னும் ரிலீஸ் ஆகல.. தோல்வி பயத்தில் பல கோடியில் பரிசளித்த பிரபாஸ்

ஆதி புருஷ் படத்தில் ஜோடியாக நடித்து வரும் இவர்கள் இருவரும் தற்போது டேட்டிங் செய்து வருகின்றனர். விரைவில் இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இந்த விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. ஆதி புருஷ் படப்பிடிப்பில் தான் பிரபாஸ் தன்னுடைய காதலை கீர்த்தி சனோனிடம் தெரிவித்தாராம்.

படக்குழுவினருக்கு அதிர்ச்சி தரும் வகையில் ப்ரபோஸ் செய்த பாகுபலி நாயகனின் காதலை கீர்த்தி சனோன் உடனே ஏற்றுக் கொண்டாராம். தற்போது ஜோடியாக வெளியில் சுற்றி திரியும் இந்த காதல் பறவைகள் விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கின்றனர். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை இப்போது தெரிவித்து வருகின்றர்.

Also read: தொடர் தோல்விகளை சந்திக்கும் பிரபாஸ்.. ரிலீசுக்கு முன்பே நெகட்டிவ் விமர்சனங்களால் சரியும் மார்க்கெட்