வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அரைச்ச மாவே அரைச்சு புளிச்சு போச்சு.. பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரை காரி துப்பும் ரசிகர்கள்

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக வெண்பா படுமோசமான வேலையை பார்க்கிறார். ஏனென்றால் பாரதியின் மகள் ஹேமாவை அடியாட்களை வைத்து கடத்தி வெளிநாட்டிற்கு அனுப்ப பார்க்கிறார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட ஹேமா தன்னை கடத்தியவரின் தொலைபேசியின் மூலமாக கண்ணம்மாவிற்கு லைவ் லொகேஷனை ஷேர் செய்திருக்கிறார். இதை வைத்து கண்ணம்மாவுடன் அவருடைய குடும்பத்தினர் ஆன அகிலன், சௌந்தர்யா, அஞ்சலி ஆகியோரும் ஹேமாவை தேடுகின்றனர்.

Also Read: ஆலியா மானசா மட்டுமல்ல சூப்பர் ஹிட் இயக்குனரை வளைத்து போட்ட சன் டிவி.. விஜய் டிவியின் டிஆர்பிக்கு வச்ச பெரிய ஆப்பு

அந்த சமயம் போலீஸ் வாகன சோதனையில் ஈடுபட்டதால் கண்ணம்மா அவர்களிடம் உதவி கேட்டு, அனைத்து வண்டிகளிலும் ஏதாவது குழந்தை இருக்கிறதா என தேட சொல்கிறார். கண்ணம்மாவின் நிலையை புரிந்து கொண்டு போலீசும் ஒவ்வொரு வாகனத்தையும் பரிசோதித்து பார்த்து இறுதியில் கண்டெய்னரில் இருந்த ஹேமாவை காப்பாற்றுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஹேமாவை கடத்திய கும்பலில் ஒருவர் மட்டும் போலீசின் கையில் சிக்கிக் கொண்டார். இதன் பிறகு தப்பித்த மற்ற கடத்தல்காரர்கள் வெண்பாவிற்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார்கள். ஆனால் போலீஸ் கையில் இருக்கும் ஒரு நபர் மட்டும் தன்னை பற்றி ஏதாவது சொல்லி விடுவாரோ என பயத்தில் வெண்பா நடுநடுங்குகிறார்.

Also Read: எப்பா சாமி இப்பவாவது முடிவுக்கு வந்தீங்களே.. பாரதி கண்ணம்மாவில் ஏற்பட்ட அதிரடி ட்விஸ்ட்

அத்துடன் ஹேமா தலையில் அடிபட்டதால் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதேபோன்றுதான் ஏற்கனவே வெண்பா ஹேமாவை கடத்தி வைத்து அதை கண்ணம்மா தான் காப்பாற்றினார்.

இப்போது மறுபடியும் அதே தான் நடந்திருக்கிறது. இப்படி அரைத்த மாவை அரைத்து புளிச்சு போச்சு என்று பாரதி கண்ணம்மா சீரியல் இயக்குனரை சின்னத்திரை ரசிகர்கள் காரி துப்புகின்றனர்.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 5 சீரியல்கள்.. விஜய் டிவியை ஓரம்கட்டிய புத்தம் புதிய சீரியல்

Trending News