விவாகரத்து செய்ததை மறைத்த 4 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முத்தி போன வயதிலும் பிளே பாயாக இருந்த ராபர்ட் மாஸ்டர்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களும் சில விவாகரத்து செய்து கொண்டதை ரசிகர்களிடம் மறைத்துள்ளனர்.

ஏடிகே:  பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியளராக இருக்கும் தினேஷ் கனகரத்தினம் என்கின்ற ஏடிகே மியூசிக் ஆல்பம் தயாரித்து கொண்டிருக்கிறார். இவர் ஜாஸ்மின் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இவருக்கு மியூசிக்கில் அதிக ஆர்வம் இருப்பதால் குடும்பத்துடன் நேரம் செலவிடாததால் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை விவாகரத்து செய்துவிட்டார். தற்போது அவருடைய மகன் மனைவியுடன் இருக்கிறார் என்றும், அவர்களுக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு இருக்கிறது என்ற தகவலை ஏடிகே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் மறைத்திருக்கிறார்.

ரச்சிதா மகாலட்சுமி: இவர் சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தினேஷ் வீட்டில் ரச்சிதாவை குழந்தை பெற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனால் சினிமாவில் ஈடுபாடுடன் இருந்த ரக்ஷிதா அதில் விருப்பமில்லாமல் இருந்திருக்கிறார்.

இதனால் தினேஷுக்கும் ரச்சிதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து இருக்கின்றனர். ரச்சிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷ், நாங்கள் பிரிந்து வாழ்கிறோமே தவிர விவாகரத்து பெறவில்லை மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வோம் என்று சொல்லி இருக்கிறார்.

மகேஸ்வரி: சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆன மகேஸ்வரியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாட்டில் கணவரை விவாகரத்து செய்த மகேஸ்வரி தற்போது தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

ராபர்ட் மாஸ்டர்: டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ஏற்கனவே திருமணமானவர். அதன் பிறகு மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். இப்போது அவருடைய மகள் மனைவி உடன் தான் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிகளை மகளைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆனது என சொன்ன ராபர்ட் மாஸ்டர், மனைவியை விவாகரத்து செய்ததை பற்றி தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமல்ல வனிதா விஜயகுமாரை திருமணம் செய்து கொண்டதாக ராபர்ட் அறிவித்தார். ஆனால் அப்போது வனிதா தயாரித்த படத்தில் ராபர்ட் மாஸ்டர் கதாநாயகனாக நடித்ததால் அந்த படத்தில் ப்ரமோஷனுக்காக தான் அப்படி சொன்னதாக பல்டி அடித்தார். அதன் பின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரச்சிதாவிற்கு ரூட்டு போட்டு கடைசி வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிளேபாயாக வலம் வந்தார். கடந்த வாரம் தான் அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் எலிமினேட் செய்யப்பட்டார்.

இவ்வாறு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த 4 பிரபலங்களும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து செய்து கொண்டவர்கள். ஆனால் அதைப் பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரிவிக்காமல் ரசிகர்களிடம் மறைத்துள்ளனர்.