விஜய் சேதுபதி மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். தன்னை நாடிவரும் அனைத்து இயக்குனர்களுக்கும் கால்ஷீட் கொடுத்து அவரது படங்களில் நடித்து வருகிறார். விஜயசேதுபதி வருடத்திற்கு 12 படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
ஒவ்வொரு படத்திலும் அவரது கதாபாத்திரம் முழுக்க முழுக்க வித்தியாசமாக உள்ளது. இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் இரண்டு, மூன்று படங்களை கைவசம் வைத்துள்ளார். அவருடன் இளம் நடிகர் ஒருவர் போட்டி போட்டு சகட்டுமேனிக்கு படங்களை நடித்துத் தள்ளினார்.
யார் வந்து என்ன கதை சொன்னாலும் சம்மதம் தெரிவித்து விடுவார். சம்பளமும் ரொம்ப கேட்க மாட்டார். எளிமையாகப் பழகும் தன்மை கொண்டவர். இதனாலேயே பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரை நாடிச் சென்றனர்.
இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறிய குட்டி தம்பி ஜிவி பிரகாஷ். ஏஆர் ரகுமானின் அக்கா மகனான ஜிவி பிரகாஷ், அவருக்கும் இசை வாடை இருக்கும் என்பதால், தமிழ் சினிமாவில் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியான வெயில் என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்தது மூலம் முதலில் இசையமைப்பாளராகவே பிரபலமானார்.
பிறகு ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்து, அதன் பின் வரிசையாக தற்போது தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டு நடித்து கொண்டிருந்தார். தொடர்ந்து மக்கள் நம்மளை பார்த்தால் வெறுப்பாகி விடுவார்கள் என்று இப்பொழுது படங்களை குறைத்து டாப் கியரில் இருந்து சற்று பின்னடைந்து விட்டார்.
சொல்லப்போனால் இவருக்கு பெரிய அளவில் படங்கள் இல்லை. நிறைய படங்களில் முகத்தை காட்டியதால் இவருக்கு இப்பொழுது படங்கள் அவ்வளவாக வருவதும் இல்லை. இவர் கைவசம் 1-2 படங்கள் தான் இருக்கிறதாம்.