திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்த ரோலுக்கு இவங்கதான் கரெக்ட் என தெறிக்கவிட்ட 5 ஹீரோவின் நண்பர்கள்.. தனுஷ்க்கு டஃப் கொடுத்த முருகதாஸ்

ஒரு படத்திற்கு ஹீரோ எந்த அளவிற்கு முக்கியமோ அவருடன் பயணிக்கும் ஹீரோ நண்பர்களும் மிகவும் முக்கியம். அது ஆக்சன் படங்களாக இருந்தாலும் சரி, காமெடி திரைப்படங்களாக இருந்தாலும் சரி ஹீரோ நண்பர் என்றாலே அவர்களுக்கு தனி கதை எழுதும் அளவுக்கு இயக்குனர்கள் இயக்கி வருகிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் நடித்து வரும் ஹீரோக்களின் நண்பர்களாகவும், காமெடி நடிகர்களாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஐந்து நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

கருணாகரன் : இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த கருணாகரன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் நண்பனாக களமிறங்கினார். தொடர்ந்து ஜிகர்தண்டா திரைப்படத்தில் சித்தார்த்தின் நண்பராகவும், தொடரி திரைப்படத்தில் தனுஷின் நண்பராகவும் வலம் வந்தார். மேலும், லிங்கா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் நண்பராக நடித்து பிரபலமானார். மேலும் இன்று நேற்று நாளை திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த காமெடியன் என்ற விகடன் விருதையும் பெற்றார்.

Also Read : சமீபத்தில் சந்தானம் ரசிகர்களை நோகடித்த 5 படங்கள்.. தியேட்டரில் தலைதெறிக்க ஓட வைத்த குலுகுலு

சதீஷ் :  கிரேசி மோகன் நடத்தி வந்த நாடக நிகழ்ச்சிகளில் நடித்து வந்த சதீஷ், தமிழ்சினிமாவில் 2006 ஆம் ஆண்டு அறிமுகமானார். 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படத்தில் ஆர்யாவின் நண்பராக நடித்து பிரபலமானார். தொடர்ந்து நடிகர் விஜயின் கத்தி திரைப்படத்தில் விஜய்க்கு நண்பனாக நடித்த நிலையில், அதன்பின் தனுஷின் தங்கமகன், சிவகார்த்திகேயனின் ரெமோ என பல துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலாமானார்.

ஆர்.ஜே. பாலாஜி : ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படத்தில் சித்தார்த்தின் நண்பராக நடித்தார். தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விஜய்சேதுபதியின் நண்பனாக வலம் வந்தார். மேலும் பிரபுதேவாவின் நடிப்பில் வெளியான தேவி, சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் உள்ளிட்ட பல திரைப்படத்திலும் நடித்தார். தற்போது இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : ரெண்டே நாளில் தியேட்டரிலிருந்து தூக்கி எறியப்பட்ட 5 படங்கள்.. ஒரு நாள் கூட தாக்கு பிடிக்காத கார்த்திக் படம்

ஆடுகளம் முருகதாஸ் : விஜய்யின் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் ஆதிவாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆடுகளம் முருகதாஸ், தொடர்ந்து ஜீவாவின் முகமூடி, தனுஷின் புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பின்னர் தனுஷின் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தில் தனுஷின் நண்பனாக வலம் வந்த இவர், அத்திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பிரபலாமானார். தற்போது பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்திலும், காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பால சரவணன் : 2013ஆம் ஆண்டு நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டி புலி திரைப்படத்தில் காமெடியனாக அறிமுகமான பாலசரவணன், தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தில் பீடை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்த பாலசரவணன், சமீபத்தில் வெளியான டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் நண்பனாக நடித்திருப்பார்.

Also Read : நக்கலிலும், நையாண்டியிலும் பிச்சு உதறும் 5 நடிகர்கள்.. சத்யராஜுக்குகே சொல்லி கொடுத்த குரு இவர்தான்

Trending News