தமிழ் திரை உலகில் காதல் மன்னனாக வலம் வருபவர் தான் அந்த நடிகர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் இப்போது எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார். என்னதான் பெரிய நடிகராக இருந்தாலும் இவர் எப்போதுமே ஒரு சர்ச்சை வட்டத்திற்குள் தான் இருப்பார்.
அதாவது இவர் இளம் வயதில் இருந்து இப்போது வரை ஏதாவது ஒரு நடிகையுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அப்படி இவர் காதலித்த நடிகைகளின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். அந்த அளவுக்கு இவர் காதல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இரண்டு திருமணம் செய்த அவர் சில பெண்களுடன் திருமணம் ஆகாமலே வாழ்ந்து வந்தார்.
இப்போது கூட ஒரு இளம் நடிகையுடன் இவர் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். மேலும் இவர் காதலித்து கழட்டிவிட்ட நடிகைகள் இவரை பற்றி அடுக்கடுக்க புகார்களை கூறினாலும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இவர் அதை ஈசியாக கடந்து விடுவார். ஆனால் இவரை காதலித்து மோசம் போன ஒரு மூத்த நடிகை பற்றி இப்போதும் திரை உலகில் பரிதாபமாக பேசுவார்கள்.
சொந்த பந்தம் பெரிதாக இல்லாத அந்த நடிகை இவரைத்தான் மலைபோல் நம்பினார். எப்படியும் இவர் திருமணம் செய்து கொள்வார் என்று நம்பிக்கையுடன் இருந்த அந்த நடிகைக்கு ஏமாற்றம்தான் கிடைத்தது. அதன் பிறகு அந்த நடிகையின் வாழ்க்கையில் பல சோதனைகள் வந்தது. இறுதியில் அவருடைய மரணம் கூட சொல்ல முடியாத வேதனையில் தான் முடிந்தது.
இப்படி இவரால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் வயிற்றெரிச்சலோ என்னவோ அந்த நடிகரின் மகள் தற்போது உண்மை காதலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார். அந்த நடிகரின் மகளும் வாரிசு நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர் தான். தற்போது அடுத்தடுத்த காதல் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் நடிகை வாய்ப்பு கிடைக்காமல் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறார்.
காதலித்தவரெல்லாம் இவரை ஏமாற்றிவிட்டு சென்றதால் தற்போது அவர் எடை குறைந்து, முகம் பொலிவிழந்து சோகத்துடன் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கு ஏற்ப நடிகர் சிறுவயதில் ஆடாத ஆட்டம் ஆடினார். தற்போது அந்த கர்மா அவருடைய மகளையே திருப்பி அடித்து விட்டது. இந்த செய்தி தான் தற்போது திரையுலகில் சத்தம் இல்லாமல் பேசப்பட்டு வருகிறது.