வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பெண்களுக்காக மட்டும் தான் விக்ரமன் குரல் கொடுப்பாரா?. அமுதவாணன் கேள்விக்கு சரியான பதிலடி

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு விக்ரமனுக்கு தான் கிடைத்துள்ளது. ஏனென்றால் அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் எல்லாமே மிகவும் தெளிவாகவும், நேர்மையாகவும் உள்ளது. இதனால் முதல் 5 பைனல் லிஸ்டில் விக்ரமன் கண்டிப்பாக இடம் பெறுவார் என்பது உறுதியாகி உள்ளது.

இந்நிலையில் காட்டுவாசிகளாக இருக்கும் நபர்களிலிருந்து விக்ரமன் வீட்டுக்குள் செல்கிறார். அப்போது அவரை கோபப்படுத்தினால் மற்றொரு அணி ஜெயித்து விடுவார்கள். இதனால் விக்ரமனை கோபப்படுத்தும் விதமாக போட்டியாளர்கள் பல கேள்விகள் கேட்கின்றனர்.

Also Read : புடவைல எரும மாடு மாதிரி இருக்க.. போட்டியாளரை கண்ட மேனி திட்டி பதிவிட்ட ரட்சிதாவின் முன்னாள் கணவன்

அதில் அமுதவாணன் எப்போதுமே பெண்களுக்கு மட்டும் தான் நீங்கள் குரல் கொடுப்பீர்களா என்று விக்ரமனை கேட்டுள்ளார். ஏனென்றால் சமீபத்தில் அசிம் மற்றும் ஜனனி இடையே மிகப்பெரிய வாக்குவாதம் சென்றது. அப்போது ஜனனி பக்கம் தான் விக்ரமன் நின்றார். காரணம் ஜனனி தவறு செய்திருந்தாலும் மன்னிப்பு கேட்டுள்ளார் என ஏடிகேயிடம் விக்ரமன் கூறியிருந்தார்.

இந்நிலையில் அமுதமாணனுக்கு சரியான பதில் கொடுக்கும்படி நெட்டிசன்கள் விக்ரமன் எந்த பிரச்சனைக்கெல்லாம் குரல் கொடுத்தார் என்பதை தெள்ளத் தெளிவாக இணையத்தில் பதிவிட்டுள்ளனர். முதலாவதாக அமுதவாணனுக்கே பொம்மை டாஸ்கில் சப்போர்ட் செய்திருந்தார்.

Also Read : பொண்டாட்டி கூட நடிக்க நம்பர் ஒன் சீரியலை விட்டு விலகிய கணவன்.. விஜய் டிவி துரத்திவிட்டும் அடங்கல

இதைத்தொடர்ந்து டிஆர்பி டாஸ்கில் அசிமுக்கு ஆதரவாக விக்ரமன் குரல் கொடுத்தார். மேலும் ராஜா ராணி டாஸ்கில் அசீம் ஏடிகே மீது குற்றம் சாட்டினார். அந்தச் சமயத்தில் ஏடிகே மேல் எந்த தப்பு இல்லை என்று விக்ரமன் வாதாடினார். மேலும் பழங்குடியினர் டாஸ்கில் அடிமை என்று அழைக்கச் சொன்னார்கள்.

அப்போது விக்ரமன் அடிமை என்று யாரையும் அழைக்கக்கூடாது, சேவகன் என்று கூறுங்கள் என விஜய் டிவி தவறை சுட்டிக்காட்டி இருந்தார். இவ்வாறு ஒவ்வொரு முறையும் எந்த பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை பார்ப்பாரே தவிர எந்த பாலினம் என்பதை எப்போதுமே விக்ரமன் பார்க்க மாட்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : வந்த வேலை முடிஞ்சிடுச்சு.. சக்கரை பொங்கல் வடகறியாக மாறிய கோபியின் வாழ்க்கை

Trending News