திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

ஸ்கூல் பையனாக நடித்து அசத்திய 5 ஹீரோக்கள்.. தொட்டிலில் போட்டா கூட செட்டாகும் தனுஷ்

படங்களில் சில சமயங்களில் பிளாஷ்பேக் சொல்லும் போது ஹீரோ, ஹீரோயின்களை கொஞ்சம் சின்ன வயதுடையவராக காட்ட வேண்டும். அப்படி காட்டும் போது ஒரு சில ஹீரோக்களுக்கு அந்த கெட்டப் கொஞ்சம் கூட செட் ஆகாது. கிராபிக்ஸ் காட்சி கூட சில நேரங்களில் சொதப்பி விடும். ஆனால் ஒரு சில ஹீரோக்களுக்கு தான் பள்ளி மாணவனாக நடித்தால் கூட செட் ஆகிவிடும். கோலிவுட்டில் என்றும் இளமையுடன் 5 ஹீரோக்கள் இருக்கிறார்கள்.

ஜெயம் ரவி: இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் கோமாளி. இந்த படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஜெயம் ரவி பள்ளி மாணவனாக நடித்தார். அப்போது 41 வயது ஆன ரவி 20 கிலோ எடையை குறைத்து 10ம் வகுப்பு மாணவன் போல் நடித்தார். இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Also Read: கோமாளி படத்தின் முதல் சாய்ஸ் ஜெயம் ரவி இல்ல.. வெற்றிக்குப்பின் பிரதீப் வெளியிட்ட ரகசியம்

தனுஷ்: நடிகர் தனுஷால் ஒரே வருடத்தில் அசுரனில் 50 வயது கடந்த சிவசாமியாகவும் நடிக்க முடியும், பட்டாசு படத்தில் 25 வயது இளைஞனாகவும் நடிக்க முடியும். 2003 ஆம் ஆண்டு தன்னுடைய முதல் படமான துள்ளுவதோ இளமையில் எப்படி இருந்தாரோ அதே போன்று 10 வருடங்கள் பிறகு வந்த மூணு படத்திலும் இருந்தார்.

ஹரிஷ் கல்யாண்: ஹரிஷ் கல்யாண் கோலிவுட்டின் சாக்லேட் பாய் என்று சொல்லலாம். இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம். சிந்து சமவெளி படத்தில் ஹீரோவாக கோலிவுட்டில் அறிமுகமானார். இவர் நடித்த பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Also Read: டான்ஸ் நடிகையின் கட்டுப்பாட்டில் தனுஷ்.. சொந்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கும் வாத்தி

ஜி வி பிரகாஷ்: இசையமைப்பாளராக இருந்து ஹீரோவானவர் ஜி வி பிரகாஷ். இவர் டார்லிங் திரைப்படத்தின் மூலம் ஹீரோ ஆனார். எந்த சீரியஸ் காட்சிகளும் இல்லாமல் ஜாலியாக படம் பண்ணக்கூடிய நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் இவர் நடித்த பேச்சுலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. என்றும் இளைமையாக இருக்க கூடியவர் ஜி வி பிரகாஷ்.

அதர்வா: அதர்வாவின் முதல் படம் பாணா காத்தாடி. இந்த படத்திலேயே அவர் பள்ளி மாணவனாக தான் நடித்திருப்பார். 22 வயதிலேயே பள்ளி மாணவன் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியவர். சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி படங்கள் இவருடைய கைவசம் இல்லையென்றாலும் பெண் ரசிகைகள் இவருக்கு அதிகம் உண்டு.

Also Read: அதர்வாவை அடித்து துரத்திய ஐஸ்வர்யா.. 2 கிரிக்கெட் வீரர்களுடன் களம் இறங்கும் சூப்பர் ஸ்டார்

 

Trending News