ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

அஜித்தை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் சன்னி லியோன்.. துணிவு டீமுக்கு ஷாக் கொடுத்த ஓட்டிங் ரிப்போர்ட்

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. ஹெச் வினோத் இயக்கியுள்ள இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் துணிவு திரைப்படத்திற்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது துணிவு திரைப்படம் வெளியாகும் அதே நாளில் விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாக இருக்கிறது. இரு பெரும் நடிகர்கள் பல வருடங்களுக்கு பின்பு மோத இருப்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும் இந்த படங்களின் ரிலீசை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.

Also read: துணிவு படத்துக்கு பயந்து வம்சி செய்த காரியம்.. எல்லாம் வீண் செலவு என்று புலமும் தயாரிப்பாளர்

இருப்பினும் துணிவு திரைப்படத்திற்கு தான் அதிக ஆர்வம் இருக்கின்றது. இந்நிலையில் சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்திற்கும் மிகப்பெரும் ஆவல் எழுந்துள்ளது. பாலிவுட் நட்சத்திரமாக இருக்கும் சன்னி லியோன் தமிழில் சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அவர் வீரமாதேவி என்னும் வரலாற்று திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து தற்போது இவர் சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோர் நடித்துவரும் ஓ மை கோஸ்ட் திரைப்படத்திலும் லீட் ரோலில் நடித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்தது.

Also read: வாரிசு மட்டுமல்ல தளபதி 67 உடன் போட்டி போடவும் நாங்கள் ரெடி.. சுத்தி அடிக்கும் துணிவு படக்குழு

அப்போது பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து, சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டிவிட்டது சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. அதிலிருந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் திரைப்படத்திற்கு தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது என தெரியவந்துள்ளது.

ஷாக் கொடுத்த ஓட்டிங் ரிப்போர்ட்

thunivu-oh my ghost
thunivu-oh my ghost

அதற்கான வோட்டிங் ரிப்போர்ட் இப்போது வெளிவந்து தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்த செய்தி தற்போது துணிவு படக்குழுவினரையும் அதிர்ச்சியாக்கி உள்ளது. ஏற்கனவே வாரிசு திரைப்படத்துடன் மோதும் அஜித்துக்கு சன்னிலியோன் சத்தம் இல்லாமல் ஒரு போட்டியாக வந்திருக்கிறார்.

Also read: இதுவரை பார்க்காத அஜித்தை இனிமேல் பார்ப்பீர்கள்.. துணிவு கேரக்டரை பற்றி க்ளூ கொடுத்த போனி கபூர்

Trending News