திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பட்ஜெட் சிறுசு, கண்டெண்ட் புதுசு.. பட்ஜெட்டை விட 14 மடங்கு வசூல் சாதனை செய்த பிரேமம் அல்போன்ஸ்

2012 ஆம் ஆண்டு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘தூணிலும் இருப்பான்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு இவர் இயக்குனர் ஆனார். தமிழ் மற்றும் மலையாள திரைப்பட உலகின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார். இப்போது இவர் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் பிரித்விராஜ் நடிப்பில் ‘கோல்டு’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

அல்போன்ஸ் புத்திரன் வித்தியாசமான கதைக்களத்தில் படங்களை கொடுப்பவர். அதனாலேயே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு. சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்து கோடிக்கணக்கில் லாபத்தை அள்ளி தந்தவர்தான் அல்போன்ஸ். அதனால் தான் இவர் ஏழு வருடம் சினிமா எடுக்காமல் இருந்த போதிலும் இவர் மீது ரசிகர்களுக்கு இருக்கும் கிரேஸ் குறையவில்லை.

Also Read: தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து ஆடிய 6 மலையாள படங்கள்.. பிரேமம் மலர் டீச்சர மறக்க முடியுமா!

நேரம்: அல்போன்ஸ் புத்திரன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் தான் நேரம். 2009 ஆம் ஆண்டில் இவர் இயக்கிய குறும்படத்தை தழுவி இந்த படத்தை எடுத்தார். ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவான படம் இது. இந்த படத்தின் மூலம் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா கோலிவுட்டில் அறிமுகம் ஆகினர். இந்த ஒரு படத்திலேயே நஸ்ரியாவுக்கு தமிழ் நாட்டில் ரசிகர்கள் அதிகம் ஆகினர்.

ஒரே நாளில் வெற்றி, வேணி, வட்டி ராஜா வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. பிளாக் காமெடியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது இந்த திரைப்படம். படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. 1 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 4.25 கோடி வசூல் செய்தது.

Also Read: விளம்பரம் இல்லாமல் 7 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுத்த இயக்குனர்.. நயன்தாராவின் கோல்ட் எப்படி இருக்கு? விமர்சனம்

பிரேமம்: நேரம் திரைப்பட வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து அல்போன்ஸ் புத்திரனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவான திரைப்படம் பிரேமம். நேரடி மலையாள படம் என்றாலும் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களும் இன்றுவரை இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படம் அந்த வருடத்திற்கான எல்லா விருதுகளையும் வென்றது.

ஆட்டோகிராப் பட சாயல் இருந்தாலும், பிரேமம் பட ஜார்ஜின் காதல் கொஞ்சம் பிரெஷ் கண்டெண்டாகவே இருந்தது. சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா என இந்த படத்திற்கு ஏற்ப கதாநாயகிகளும் கச்சிதமாக பொருந்தினர். 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 74 கோடி வரை வசூல் செய்தது. 170 நாட்களை தாண்டி திரையரங்கில் ஓடியது.

Also Read: உருமாறிப்போன பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ்.. இந்த ஒரே பிரச்சனையால் 7 வருடம் முடங்கிக் கிடந்த சோகம்

Trending News