திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தமிழ் ரசிகர்களை சுண்டி இழுத்த அனுஷ்காவின் 5 படங்கள்.. ராஜமாதாவை ஒரு கை பார்த்த தேவசேனா

தமிழ் சினிமாவில் ஹீரோயின் உயரமாக இருந்தார் என்றால் அவர் பெரும்பாலும் உயரமான ஹீரோக்களுடன் தான் நடிப்பதற்கு செட் ஆவார் என்ற ஒரு பழக்கத்தை உடைத்தெறிந்தவர் அனுஷ்கா ஷெட்டி. மாதவனின் 2 திரைப்படத்தில் “மொபைலா பாடலில்” இவரை கண்டு ஜொள்ளு விடாத தமிழ் ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம்.

மேலும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் படமான அருந்ததி மூலம் குடும்பப் பெண்களையும் தன்வசம் ஆக்கியவர் அனுஷ்கா. அனுஷ்கா நடிப்பில் தமிழில் வெளிவந்த 5 சூப்பர் ஹிட் படங்கள்.

Also Read: சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தை மிஸ் செய்த அனுஷ்கா.. ஆர்யா படத்தால் வந்த கெட்ட நேரம்

அருந்ததி: இந்தப்படத்தில் நான் அனுஷ்காவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பந்தமே உருவானது என்று சொல்லலாம். இந்தப் படத்தில் அருமையாக நடித்திருப்பார் அனுஷ்கா. இவருக்கு ஈடுகொடுக்கும் வில்லனாக “சோனு சூத்” மிரட்டியிருப்பார் என்பதில் ஆச்சரியமில்லை.

சிங்கம்: ஹரி இயக்கத்தில் 3 பாகங்களாக வெளிவந்த படம் சிங்கம். இந்த மூன்று பாகத்திலும் ஹீரோயினாக நடித்து இருப்பார் அனுஷ்கா. மேலும் சூர்யா இவரைவிட உயரம் குறைந்தவர் என்றாலுமே அனுஷ்காவிற்கு தகுந்தவாறு எடிட் பண்ணி காட்சிகளை தத்ரூபமாக அமைத்திருப்பார் ஹரி.

Also Read: ஜோதிகா வாய்ப்பை தட்டிப்பறித்த அனுஷ்கா.. இதெல்லாம் அந்தம்மாக்கு முன்னாடியே நான் செஞ்சிட்டேன்

தெய்வத்திருமகள்: அனுஷ்காவிற்கு தமிழில் மற்றுமொரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தெய்வ திருமகள். இந்த படத்தில் மகளைப் பிரிந்த தந்தையுடன் திரும்ப மகளை சேர்க்க போராடும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

என்னை அறிந்தால்: இவரை வைத்துதான் இந்த பட கதை நகரும். தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவருடைய உடல் உறுப்புகளை திருட ஒரு கும்பல் போடும் திட்டத்தை முறியடிப்பார் ஹீரோ அஜித்.

Also Read: நயன்தாராவாக நடிக்கப்போகும் அனுஷ்கா.. இங்க வேகல அங்கையாது பருப்பு வேகுதானு பார்ப்போம்

பாகுபலி: ரம்யா கிருஷ்ணனுக்கு இணையாக இந்தப்படத்தில் போட்டி போட்டு நடித்திருப்பார் அனுஷ்கா. தேவசேனா கதாபாத்திரத்தை இவரை விட்டால் வேறு யாரும் இந்த அளவுக்கு தத்ரூபமாக நடித்து இருக்க முடியாது.

Trending News