பொதுவாகவே பெண்கள் புடவை எடுக்க போனால் குறைந்தபட்சம் 10 கடையாவது ஏரி இறங்குவார்கள் என்பது பலகாலமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது கையில் உள்ள ஒரு மொபைல் ஃபோன் மூலமாகவே தங்களுக்கு தேவையான பொருட்கள், ஆடைகள், உபகரணங்கள் எல்லாவற்றையும் ஆர்டர் செய்து விடுகிறார்கள்.
அந்த பொருட்கள் நாம் வீடு தேடியும் வந்து விடுகிறது. இதில் என்ன ஒரு நல்ல விஷயம் என்றால் நடுவில் தரகர்கள் ஏதும் இல்லாமல் நேரடியாக உரிமையாளர்களிடமிருந்து வாடிக்கையாளர்கள் வாங்குவதால் இரண்டு பேருக்குமே பொருட்களுக்கான சரியான விலை கிடைக்கிறது.
இதனால் தான் இப்போது பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குகிறார்கள். இதில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் தான் தலை தூக்கியது. இந்த இரு நிறுவனங்கள் இடையே தான் எப்போதுமே போட்டி நிலவும். வாடிக்கையாளர்கள் இவர்களிடம் நிறைய பொருட்களை வாங்கி வந்தனர்.
ஆனால் இப்போது புதிய செயலி மூலம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பெருத்த அடி வாங்கி உள்ளது. சமீபகாலமாக மீஷோ செயலியில் மக்கள் கூட்டம் குவிய தொடங்கியுள்ளனர். மீஷோவில் ஏராளமான கலெக்ஷன் உள்ளதாகவும் மற்ற செயல்களுடன் ஒப்பிடும்போது இதில் விலை மலிவாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் மீஷோவில் மொத்தமாக ஆர்டர் செய்து பொருட்களை வாங்கி அதை வெளியிலும் வியாபாரம் செய்து சிலர் வருகிறார்கள். மீஷோவில் பொருட்களும் குறைந்த வலையில் தரமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை அந்த பொருள் நமக்கு பிடிக்கவில்லை என்றால் ரிட்டன் அனுப்பும் வசதியும் உள்ளது.
மேலும் நாம் செலுத்திய தொகை இரண்டு, மூன்று நாட்களிலேயே வங்கி கணக்கில் ஏறி விடுகிறது. இதனால் மக்கள் நம்பகத் தன்மையுடன் மீஷோ செயலியை பயன்படுத்த ஆரம்பித்து தற்போது வீட்டுக்கு தேவையானது மட்டுமின்றி தேவையற்ற பொருட்களையும் வாங்கி குவித்து வருகிறார்கள்.