வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

மதிக்காத இயக்குனர்.. தேடி போய் வாய்ப்பு கேட்ட லவ் டுடே ஹீரோயின்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான லவ் டுடே திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் லாபம் பார்த்து வருகிறது. இன்றைய கால தலைமுறைகளையும், காதலையும் பற்றி கலகலப்பாக கூறிய இந்த திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதனாலேயே இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

இப்படி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கும் இந்த படத்தை திரைபிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் பிரதீப்பை தன் வீட்டுக்கு கூப்பிட்டு பாராட்டினார். இந்நிலையில் இயக்குனர் அட்லி லவ் டுடே திரைப்படத்திற்கு தன் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Also read: அக்கட தேசத்தில் வெளியான லவ் டுடே.. தலைகால் புரியாமல் ரசிகர் செய்த சம்பவம், ஜெர்க் ஆன இவானா

பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பிரதீப், சத்யராஜ், ராதிகா, தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகிய அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு படம் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

பட குழுவினர் அனைவரின் பெயரையும் குறிப்பிட்ட அவர் ஹீரோயின் இவானா பெயரை மட்டும் மறந்து விட்டார் போல. அவருடைய பெயரை மட்டும் குறிப்பிடவே இல்லை. ஆனாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஹீரோயின் அவருடைய அந்த பதிவுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் இந்த படத்தின் வெற்றிக்கு நானும் ஒரு முக்கிய காரணம் என்று அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

Also read: 22 வயதில் படுக்கைஅறை காட்சி உங்க வீட்ல எப்படி ஒத்துக்கிட்டாங்க? அசரவைக்கும் பதில் அளித்த இவானா

அட்லி எதற்காக இவானாவின் பெயரை மட்டும் அவாய்ட் செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் இவானா தன்னுடைய ரிப்ளை மூலம் பட வாய்ப்புக்கு அடி போட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக மாறி இருக்கும் இவானாவுக்கு இன்னும் அடுத்தடுத்த திரைப்படங்கள் எதுவும் புக்காகவில்லை ஆனால் இனிமேல் அவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

அதனால் தான் இயக்குனரான அட்லிக்கு இப்படி ஒரு ரிப்ளை செய்து அவர் தேடி போய் பட வாய்ப்பு கேட்டுள்ளார். இது ஒரு பக்கம் இருந்தாலும் தன்னை மதிக்காத அட்லிக்கு இவானா இதன் மூலம் ஒரு தரமான பதிலடி கொடுத்துள்ளதாகவே ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் இவானாவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் இனிமேல் தேடி வரும். அதில் அட்லியின் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

Also read: இளசுகளின் கனவு கன்னியாக மாறிய லவ் டுடே இவானா.. தம்மாத்துண்டு இடுப்பை காட்டி மயக்கிய புகைப்படங்கள்

Trending News