ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

ஒரே மாதிரி நடிப்பை வெளிப்படுத்திய உதயநிதியின் 5 படங்கள்.. லாஜிக் இல்லாமல் குழப்பி விட்டதால் ஆன பிளாப்

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகர், அரசியல்வாதி தற்போது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை விநியோகம் செய்யும் திரையரங்கு விநியோகஸ்தர்கள் என பன்முகத் தன்மை கொண்டவர் தான் உதயநிதி ஸ்டாலின். இவரது முதல் திரைப்படத்திலிருந்து இவரது காமெடி கலந்த நடிப்பை ரசிகர்கள் கண்டு வியந்துள்ளனர். இதனிடையே இவர் நடித்த அடுத்தடுத்த நடித்த ஐந்து திரைப்படங்களில் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்,  அப்படி இவர் ஒரே பாணியில் நடித்த 5 ஓடாத திரைப்படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஒரு கல் ஒரு கண்ணாடி : இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், சந்தானம், ஹன்சிகா மோத்வானி உள்ளிட்டோர் நடித்திருப்பர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இத்திரைப்படம் 100 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடியது. படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவை மட்டுமே இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம் பெற்றிருக்கும், தனது முதல் படத்திலேயேநடிப்பின் மூலம் வெற்றியை பெற்றார் உதயநிதி ஸ்டாலின்.

Also Read : படமாக போகும் தமிழக முதல்வரின் வாழ்க்கை.. பக்கா பிளானுடன் களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்

இது கதிர்வேலனின் காதலி : 2014 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்.ஆர் பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் அவ்வளவாக திரையரங்கில் ஓடவில்லை. காதல், சென்டிமென்ட், நகைச்சுவை என எதுவும் சரியாக அமையாமல் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தது.

நண்பேன்டா : இயக்குனர் ஜெகதீஷ் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு நயன்தாரா,உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து நடித்த இரண்டாவது திரைப்படமான நண்பேண்டா திரைப்படமும் தோல்வி திரைப்படமாக அமைந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்கள் ஹிட் அடித்தாலும் இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின்,சந்தானம் காமெடி என எல்லாமே ஒரே பாணியில் இருந்தது. மேலும் கதையில் அழுத்தம் இல்லாததால் இத்திரைப்படம் ஓடவில்லை.

Also Read : பாடாய்படுத்தும் வெற்றி இயக்குனர்.. முடியல! நடிப்புக்கு முழுக்கு போடும் உதயநிதி ஸ்டாலின்

சரவணன் இருக்க பயமேன் : இயக்குனர் எழில் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின்,சூரி,ரெஜினா கெஸன்ட்ரா உள்ளிட்ட பலர் நடித்திருப்பர்.அரசியல் சம்பந்தமாக முதலில் கதை நகரும் வகையில் இருந்த நிலையில், அடுத்தடுத்த காட்சிகளில் படத்தின் கதையை பயங்கரமாக சொதப்பியிருப்பார் இயக்குனர். உதயநிதி ஸ்டாலின் நடிப்பு இத்திரைப்படத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்த பாணியிலேயே இருந்ததாக விமர்சிக்கப்பட்டார்..

பொதுவாக என் மனசு தங்கம் : இயக்குனர் தளபதி பிரபு இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த இப்படம் கிராமத்து கதையை மையமாக கொண்டது. உதயநிதி ஸ்டாலினின் தோற்றம் வித்தியாசமாக அமைந்த நிலையில், படத்தின் கதை விறுவிறுப்பாக அமையாததே படும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

Also Read : பாபா ரீ ரிலீஸில் இப்படி ஒரு அரசியல் சூழ்ச்சியா? பரபரப்பைக் கிளப்பி, உண்மை காரணத்தை உடைக்கும் பிரபலம்

Trending News