பாலாவால் 16 கோடி நஷ்டம்.. வட்டியை கூட அடைக்க முடியாமல் 6 வருடமாக தவித்து வரும் பிரபலம்

இயக்குனர் பாலா என்றாலே அவரை சுற்றி சர்ச்சைகள் தான் நிறைந்து இருக்கிறது. இவராக போய் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறாரா இல்லை இவரால் தான் சர்ச்சையா என்பது தற்போது வரை தெரியவில்லை. ஆரம்பம் முதலே பல நடிகர், நடிகைகள் பாலாவிடம் பணியாற்றுவது மிகவும் கடினம் என்று கூறியுள்ளனர்.

முதலில் துருவ் விக்ரம் வைத்து ஒரு படம் எடுத்தார். அது பாதியிலேயே டிராப் ஆன நிலையில், இப்போது சூர்யாவை வைத்து எடுத்த வணங்கான் படமும் கேள்விக்குறியாகியுள்ளது. சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதால் அடுத்ததாக மற்ற நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்த வருகிறது.

Also Read : ஃபர்ஸ்ட் லுக் வந்து டிராப்பான சூர்யாவின் 3 படங்கள்.. பாலாவுக்கு முன்பு டீலில் விட்ட 2 இயக்குனர்கள்

இந்நிலையில் பாலாவால் பிரபலம் ஒருவர் 16 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார். அதாவது ஆர் கே சுரேஷ் படங்களை தயாரிப்பது மற்றும் விநியோகம் செய்வது என்று கொடிகட்டி பறந்தார். யாருக்குத்தான் ஆசை விட்டது, அதேபோல் ஆர் கே சுரேஷுக்கும் நடிப்பின் மீது ஆசை வந்துள்ளது.

அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாலா அவருடைய தாரை தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து படத்தை தயாரிக்கவும் கூறிவிட்டார். இந்த படத்தால் ஆர்கே சுரேஷுக்கு 16 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகியும் தற்போது வரை வட்டியை கூட அவரால் கட்ட முடியவில்லை.

Also Read : பாலாவை போல காய் நகர்த்தும் மற்றொரு இயக்குனர்.. நாசுக்காக வெளியில் தெரியாமல் செய்யும் வேலை

ஆர் கே சுரேஷ் போல பலர் பாலாவால் நஷ்டத்தை சந்தித்துள்ளனர் என பயில்வான் கூறியுள்ளார். மேலும் ஆர்கே சுரேஷ் இடம் வெளியில் பாலாவை பற்றி கேட்டால் அவர் நல்ல இயக்குனர் என்று புகழ்ந்து தான் பேசுவார். ஆனால் மனதுக்குள் பாலா மீது அவ்வளவு கோபம் அவருக்கு இருக்கிறது.

மேலும் இப்போது பாலாவை சூர்யாவும் கைவிட்டதால் இனிமேல் அவரை நம்பி யாரும் படத்தை தயாரிக்க முன் வர மாட்டார்கள். இவரே படத்தை தயாரிக்க பைனான்சியரை அணுகினாலும் வேலைக்காகாது. யாரும் இவரை நம்பி பணம் கொடுக்க தயாராக இல்லை. இதனால் பாலாவின் சினிமா கேரியர் முடிந்து விட்டது என்பது போல பயில்வான் கூறியுள்ளார்.

Also Read : கசாப்புக்கடை ஆடு போல் மாட்டிக்கொண்ட அதர்வா.. சுத்தப் பொய், புருடாக்களை அள்ளிவிடும் பாலா