திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மாண்டஸ் புயலை ஓரங்கட்டிய சூப்பர் ஸ்டார்.. 20 வருடங்களுக்கு பிறகும் வரலாறு படைக்குமா பாபா ரீ ரிலீஸ்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தான் பாபா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, விஜயகுமார், சுஜாதா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் அப்போதே பெரும் பரபரப்பை கிளப்பியது. தற்போது அதே போன்ற ஒரு பரபரப்பை இந்த ரீ ரிலீஸ் ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினிகாந்த் வரும் 12ஆம் தேதி தன்னுடைய 72 ஆம் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அதை ஒட்டி இன்று வெளியாகி உள்ள பாபா திரைப்படத்தை காண்பதற்காக ரசிகர்களின் கூட்டம் தியேட்டர்களில் அலை மோதி வருகிறது. அதிலும் முதல் காட்சியான காலை நான்கு மணி காட்சிகளை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.

Also read: ரஜினி படத்தால் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்.. எதிர்பாராத பரிசு கொடுத்து வாழ வைத்த சூப்பர் ஸ்டார்

தற்போது தமிழகத்தை மாண்டஸ் புயல் ஒருவழியாக்கி புரட்டி போட்டு இருக்கிறது. அதிலும் சென்னை கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. ஆனால் அதையெல்லாம் ஓரம் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். புயல் எல்லாம் எங்கள் தலைவர் முன் தூசு என்று சோசியல் மீடியாவில் தெறிக்கவிடும் ரசிகர்கள் பாபா திரைப்படம் பற்றிய தங்கள் கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

அதிலும் ஒரு ரசிகர் இந்த திரைப்படம் வாரிசு, துணிவுக்கு போட்டியாக பொங்கலுக்கு வெளியாகி இருந்தால் விஜய், அஜித் எல்லாம் அவ்வளவுதான் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதுவே பாபா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெற்றுள்ளது என்பதை காட்டுகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் இப்படத்தில் புதுப்பொலிவுடன் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

Also read: எதிர்பார்ப்பை எகிற வைத்த பாபா ரீ ரிலீஸ்.. நக்கல் செய்து ரஜினியை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்

படத்தில் ஒரு சில காட்சிகள் வெட்டப்பட்டிருந்தாலும் இப்படத்தை ரசிகர்கள் மிகவும் என்ஜாய் செய்து வருகின்றனர். அதிலும் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கும் கிளைமேக்ஸ் ரசிகர்கள் எதிர்பாராத ஒன்று. இந்த படம் வெளியான அந்த காலகட்டத்தில் சிறு பிள்ளைகளாக இருந்தவர்கள் இப்போது ஆர்வத்துடன் இப்படத்தை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் இப்படி ஒரு அதிசயத்தை சூப்பர் ஸ்டாரால் மட்டுமே செய்ய முடியும்.

மேலும் இப்படத்தை விரைவில் ஓடிடியிலும் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு இப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் 20 வருடங்களுக்கு பிறகும் இந்த பாபா படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ஒரு வரலாறு படைத்துள்ளார். 2002 ஆம் ஆண்டு மிகப்பெரும் தோல்வி என்று பேசப்பட்டு வந்த இப்படம் இப்போது சென்னை, மதுரை உள்பட பல இடங்களிலும் மாஸ் காட்டி வருகிறது.

Also read: பாபா ரீ ரிலீஸில் இப்படி ஒரு அரசியல் சூழ்ச்சியா? பரபரப்பைக் கிளப்பி, உண்மை காரணத்தை உடைக்கும் பிரபலம்

Trending News