செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

5 டாப் ஹீரோக்களுக்கு மாஸ் ஹிட் கொடுத்த ஆர். சுந்தர்ராஜன் .. கேப்டன் விஜயகாந்துக்கு விருதுகளை வாங்கி கொடுத்த படம்

ஆர். சுந்தர்ராஜன் அவர்களை ஒரு குணச்சித்திர நடிகராகவும், காமெடியனாகவும் தெரிந்த நம்மில் பலருக்கு அவரை ஒரு நல்ல இயக்குனராக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் இயக்குனராக இதுவரை 26 படங்களை இயக்கி இருக்கிறார். கோலிவுட்டின் டாப் ஹீரோக்கள் பலருக்கு மாஸ் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். கின்னஸ் சாதனை படைத்த ‘சுயம்வரம்’ படத்தை இயக்கிய இயக்குனர்கள் 14 பேரில் இவரும் ஒருவர். மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இவர் ராசியான இயக்குனர் என்றே சொல்லலாம்.

ரஜினிகாந்த்: 1989 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், நதியா, ராதா, ஜனகராஜ், ஆனந்த்ராஜ், வினு சக்ரவர்த்தி நடிப்பில், ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படம் ராஜாதி ராஜா. இந்த படத்தில் ரஜினிகாந்த இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ராஜாதி ராஜா படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் 175 நாட்கள் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது.

Also Read: இப்பவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ரஜினியின் 10 படத்தின் வசனங்கள்.. அவரே எழுதி அதிரடி காட்டிய பஞ்ச் டயலாக்

விஜயகாந்த்: கேப்டன் விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் என்றால் அது வைதேகி காத்திருந்தாள். இந்த படத்தை ஆர். சுந்தர்ராஜன் எழுதி, இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு இவர்கள் இருவரும் அம்மன் கோவில் கிழக்காலே படத்தில் மீண்டும் இணைந்தனர். இந்த படம் 150 நாட்களும் மேல் ஓடி வெற்றி பெற்றது. தமிழகத்தில் 20 தியேட்டர்களில் 200 நாட்கள் ஓடியது. இந்த படத்திற்காக விஜயகாந்திற்கு பிலிம் பேர் விருதும் கிடைத்தது.

சத்யராஜ்: ஆர். சுந்தர்ராஜன், சத்யராஜை வைத்து இயக்கிய திரைப்படம் தான் திருமதி பழனிச்சாமி. இந்த படத்தில் சுகன்யா, கவுண்டமணி, செந்தில், டெல்லி கணேஷ், நாசர், ரேகா, ஸ்ரீவித்யாவுடன் ஆர். சுந்தர்ராஜனும் நடித்திருப்பார். எல்லா படங்களிலும் மற்றவர்களை கலாய்த்து தள்ளும் கவுண்டமணி மற்றும் செந்திலேயே இவர் இந்த படத்தில் ஓட விட்டிருப்பார்.

Also Read: விஜயகாந்தை வைத்து 7 படங்கள் இயக்கிய பிரபலம் யார் தெரியுமா? அதிலும் 5-க்கு மேல சூப்பர் டூப்பர் ஹிட்

பிரபு: பிரபு, சங்கீதா, ரஞ்சிதா, மன்சூர் அலிகான் நடிப்பில், ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படம் சீதனம். இந்த படம் 1995 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் பிரபு ஆக்சன் ஹீரோவாக நடித்திருப்பார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்து இருந்தார். இந்த படம் நடிகர் பிரபுவுக்கு திரையுலகில் ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

மோகன்: நடிகர் மோகன் மற்றும் பூர்ணிமா பாக்யராஜை வைத்து ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய திரைப்படம் பயணங்கள் முடிவதில்லை. இந்த படம் 1982 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இளையராஜா இசையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு பிலிம் பேர் விருதுகளையும் பெற்றது.

Also Read: விஜயகாந்தை மாடர்னாக மாற்றிய நடிகை.. கடைசிவரை நிறைவேறாத காதல்

- Advertisement -spot_img

Trending News