தென்னிந்திய சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் தனக்கின ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர்களுக்கு நிகராக தமிழ் சினிமாவில் ஹீரோவையும் தாண்டி வில்லன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சத்யரா.ஜ் அவர்களுடன் ரசிக்க கூடிய வகையில் 5 தரமான படங்கள் வெளிவந்தது.
மிஸ்டர் பாரத்: 1986 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த அதிரடி படமான இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், அம்பிகா, கவுண்டமணி, எஸ்வி சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சத்யராஜ் அப்பா கதாபாத்திரத்திலும் ரஜினிகாந்த் மகன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
தனது தாயை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழும் தனது தந்தையை பழிவாங்கும் கதையாகும். இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள் ஆகும். அதிலும் “என்னம்மா கண்ணு சௌக்கியமா” என்ற பாடலில் இவர்கள் அடிக்கும் லூட்டி அல்டிமேட் ஆக இருக்கும். ரஜினிக்கு டஃப் கொடுக்கும் வகையில் சத்யராஜ் இதில் நடித்திருப்பார். இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.
நான் மகான் அல்ல: 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படமும் இயக்குனர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் ரஜினியுடன் ராதா, நம்பியார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜம் பால சந்தர் தயாரித்த இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். சத்யராஜ் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
நாட்டில் நடக்கும் ஊழல்களை ஒழித்து நீதியை நிலை நாட்ட ரஜினி முயற்சி செய்வார். குற்றவாளிகளை அகிம்சை வழியில் திருத்த முடியாமல் போனதால் சட்டத்தை தானே கையில் எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பது போல இக்கதை அமைந்துள்ளது. ரஜினி இப்படத்தில் வக்கீலாக மாஸ் காட்டி நடித்திருப்பார் .
நான் சிகப்பு மனிதன்: 1985 ஆம் ஆண்டு இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் சத்தியராஜ், அம்பிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராகவும், சத்யராஜ் வில்லன் அணி தலைவராகவும் இருந்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.
இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.படத்தில் வரும் பெரும்பாலான இரவு காட்சிகளில் ரஜினிக்கு சிவப்பு வண்ணத்தில் ஆடைகள் கொடுக்கப்பட்டிருக்கும். இது படத்தின் தலைப்பை நினைவுபடுத்தும் குறியீடாக அமைந்துள்ளது.
தம்பிக்கு எந்த ஊரு: 1984 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த காமெடி மற்றும் அதிரடி கலந்த இந்த படத்தில் ரஜினியுடன் மாதவி, பிஎஸ் ராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் ரஜினிகாந்த் பாலு என்ற ஆடம்பரமாக செலவழிக்க கூடியவராக நடித்திருப்பார்.
பின்னர் அதில் இருந்து தன்னை எவ்வாறு மீட்டு ஒரு நல்ல மனிதராக்கும் முயற்சியில் தனது தந்தை வழியில் உள்ள நண்பரின் கிராமத்திற்கு செல்கிறார். கிராமத்தில் நடக்கும் கலாட்டாக்களுக்கும் காமெடிகளுக்கும் பஞ்சமே இருக்காது என்பது போன்று தத்ரூபமாக நடித்திருப்பார். இவை அனைத்தும் ரசிகர்களால் ரசிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும்.
மூன்று முகம்: 1982 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ ஜெகநாதன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம். இதில் ரஜினிகாந்த் உடன் சத்தியராஜ், ராதிகா சரத்குமார், சில்க் ஸ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த் மூன்று வேடங்களான அலெக்ஸ்பாண்டியன், அருண், ஜோன் போன்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். சத்யராஜ் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அலெக்ஸ் பாண்டியன் என்றால் சூப்பர் ஸ்டார் தான் என்று அளவிற்கு தனது நடிப்புத் திறமையை இப்படத்தில் வெளிப்படுத்தி இருப்பார்.
இவ்வாறு இந்த 5 படங்களும் படங்களும் சத்யராஜ்-ரஜினி காம்போவில் மாபெரும் வெற்றி பெற்றபடங்களாகும். அதிலும் என்னம்மா கண்ணு சௌக்கியமா என்ற பாடல் மூலம் இருவரின் காம்போ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாப்புலரானது.