வாரிசு படத்தை பார்த்த பிரபலங்கள்.. கிளைமாக்ஸ்ல வம்சி வச்சாரு பாரு ட்விஸ்ட்!

தளபதி விஜயின் வாரிசு படத்திற்கான அப்டேட்க்காக ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றார்கள். ஏனென்றால் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இடையே தான் எப்போதும் கடுமையான போட்டி நிலவும். இவர்கள் படம் தனித்தனியாக வெளியானாலே மிகப்பெரிய அலப்பறையை கூட்டுவார்கள்.

இப்போது சொல்லவா வேண்டும் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி உள்ளது. நாளுக்கு நாள் இந்த இரண்டு படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கிறது. இப்போது வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் பற்றி முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படம் விஜயின் பூவே உனக்காக, துள்ளாத மனம் துள்ளும் போன்ற படங்களின் சாயலில் இருக்கும் என்ற அப்டேட் ஏற்கனவே வெளியாகி உள்ளது. இந்நிலையில் வாரிசு படம் சென்சார் முடிந்து வெளிவரும் நிலையில் சில டெக்னீசியன்கள் இந்த படத்தை பார்த்துள்ளனர்.

அதாவது வாரிசு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வம்சி ட்விஸ்ட் வைத்துள்ளாராம். கடைசி 30 நிமிடங்கள் யாராக இருந்தாலும் இந்த படத்தை பார்த்தால் அழுகை வந்துவிடுமாம். அந்த அளவுக்கு படம் சென்டிமென்ட் ஆக எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்போதுமே விஜயின் படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ் உள்ளனர்.

அந்த வகையில் குடும்பம் கொண்டாடும் வெற்றி என்ற பெயருக்கு உண்மையாக வாரிசு படத்தை கொடுத்துள்ளார் வம்சி என்கின்றனர். மேலும் அஜித்திற்கு விசுவாசம் எப்படி அமைந்ததோ, அதைவிட ஒரு படி மேலாக விஜய்க்கு வாரிசு படம் இருக்கும்.

அதுமட்டுமின்றி வாரிசு படத்தில் நிறைய ஆக்சன் காட்சிகளும் இடம் பெற்றுள்ளதாம். இந்த படத்தின் போஸ்டர் வெளியான போதே சண்டைக் காட்சிகள் நிறைய இருக்கும் என்பது தெரிய வந்தது. இப்போது இந்த அப்டேட்டால் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →